சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டலில் ஏரியைப் பார்த்தபடி காட்சியளிக்கும் நவீன நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார அறையில் ஏற்பட்ட தீ, விடுதி முழுவதும் விறுவிறுவென பரவியது.
தீ பரவுவதை அறிந்த பணியாளர்கள், அறையில் தங்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். இதனால் எவருக்கும் தீயினால் காயம் ஏற்படவில்லை. இத்தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து விரைவாக தீயை அணைத்துள்ளனர்.
இந்த விடுதி மிகவும் நவீன வசதிகளுடன் ஏரியையும், மலையையும் அறையிலிருந்தே பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்டிருந்ததால் ஓரிரவுக்கான அறை வாடகை மட்டும் 1040 ஃபிராங்க் ஆகும்.
அங்கிருந்த 40 அறைகளில் 24 அறைகள் இந்த வசதியுடன் இருந்தன. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக