மக்களுக்கு கருணைக்கொலைக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற சுவிஸ் அரசு, தனது விதிமுறைகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆல்டா கிராஸ்(Alda Gross)(82) என்ற மூதாட்டி தனிமை தனக்கு சலிப்பூட்டுவதாகக் கூறி தன்னைக் கொலைச் செய்து விடும்படி மருத்துவ உதவி கோரியிருந்தார். ஆனால் அவருக்கு நாள்பட்ட நோய் எதுவும் இல்லாததால் அவரது கோரிக்கையை மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
பொதுவாக சுவிட்சர்லாந்தில் நாள்பட்ட, குணமாக வாய்ப்பில்லாத நோயாளிகளை கருணைக்கொலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் வயதான காரணத்தால் மட்டுமே ஒருவரை கருணைக் கொலைக்கு உட்படுத்துவதில்லை.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற போது கருணைக் கொலைக்கான விதிமுறைகளை சுவிஸ் அரசு வரையறுத்தால் மட்டுமே மருத்துவர்கள் முறையாகத் தமது பணிகளை நிறைவேற்ற முடியும் என்று தீர்ப்பளித்தது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக