வெள்ளி, 24 நவம்பர், 2017

ஈழத் தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ளனர்!?

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் 
அபாயம் எழுந்துள்ளது.
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை
 கைச்சாத்திட்டார்.
இந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர்
 தெரித்துள்ளார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும்
 வருகின்றன.
எனினும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து 
வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று
 கூறியிருந்தார்
மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.
சுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா 
சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர்
 தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு அமைய சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் எச்சரிக்கை
 விடுத்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சுவிஸர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஸ்ரீலங்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து அவர்களை நாடு கடத்தக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் அகதிகள் தொடர்பான சட்ட நிபுணர்கள்
 தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இவற்றை நிராகரிக்கும் சுவிஸர்லாந்து அரசு, கடந்த யூலை மாதமும் ஈழத் தமிழர் ஒருவரின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
அறிவித்துள்ளது.
அதேவேளை சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகத் தகவல்களுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையர்களின் 1316 அரசியல் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் தீர்மானம் எடுக்கப்படாது வைக்கப்பட்டிருப்பதாக அந்த அலுவலக புள்ளி 
விபரங்கள் கூறுகின்றன.
அதேவேளை இந்தக் காலப்பகுதியில் இலங்கையர்கள் ஐயாயிரம் பேர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்ததாகவும். இவர்களில் 3674 பேருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவர்களில் 1613 பேருக்கு பாரிய உயிர் ஆபத்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வியாழன், 23 நவம்பர், 2017

அகதியாய் வெளிநாட்டுக்கு 1985 ஆம் ஆண்டுகளில் வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்

1985 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியில் மொழி தெரியாமல் வேலை தேடினார்கள், அகதி முகாம்களில் எப்படியிருந்தார்கள் என்பதையெல்லாம்
 பிரதிபலிக்கும் 
• நாட்டில இருந்து வெளிநாடு வந்தவர்கள் எவ்வளவு அழகாகவும், ஜடாமுடியுடனும் இருந்தார்கள் என்பதை .
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வசதியாக வாழ்வதாகவே எல்லோரும் “கற்பனையில்” நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பட்ட, படும் கஸ்ரம் பலருக்கு புரிவதில்லை.இதனை பிரதிபலிக்கும் விதமாக 1986ம் ஆண்டளவில் சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் உள்ள சொலிகோபன் எனும் இடத்தில் அமைந்திருந்த “அகதி முகாமில்” படமாக்கப்படட
 திரைப்படம் இது.
மேற்படி அகதி முகாமில் மொத்தமாக ஐம்பது பேர் வசித்து வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.1986ம் ஆண்டளவில் சுவிஸ் உட்பட ஐரோப்பிய நாடெங்கும் அகதிகளின் வருகை காரணமாக இனத்துவேசம் ஓரளவு காணப்பட்ட போதிலும், சுவிஸ் நாட்டு வயதானவர்கள், தமிழர்களை பராமரித்து சாதாரண (பண்ணை) வேலை வழங்க பின் நிற்க்கவில்லை. ஆயினும் அன்றைய கால கட்டத்தில் “ஒரு நாள் சம்பளம்” நான்கு 
அல்லது ஐந்து பிராங் மட்டுமே.. ஆகக்கூடிய சம்பளம் ஏழு சுவிஸ் பிராங்.இருப்பினும் இந்த சம்பளத்தை பெறுவதுக்காகவேனும் காலையில் எழுந்து வீடுவீடாக சென்று வேலை கேட்பதும், மாலையில் அகதி முகாம் வந்து, வலைப்பந்து விளையாடி, முடிவெட்டிக் குளித்து,
 சாப்பிட்டு, எல்லோரும் 
ஒரு அறையில் இருந்து (ஐம்பது ராப்பன் கொடுத்து) படம் பார்ப்பதும், ஊரில் இருந்து உறவுகளிடம் இருந்து வரும் கடிதங்களை பார்த்து சந்தோசம் அடைவதும், மாலை நேரங்களில் உதைபந்து விளையாட்டு, ரெஸ்ர்லிங் போன்றவற்றை பார்ப்பதும், நித்திரையுமாகவே 
வாழ்க்கை..
இலங்கை புதினங்களை கிழமையில் ஒருமுறை வரும் பத்திரிகையை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வதுடன், “தமிழீழ தகவல் நடுவத்தால்” ஒளிபரப்பாகும் செய்திகளை, தினம்தோறும் பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு, எழுதி விளம்பர பலகையில் ஒட்டி அனைவரும் விழுந்தடித்து பார்ப்பதே வழமை. (இப்போது போல் அக்காலத்தில் கொம்பியூட்டர்
 வசதி இல்லை)அகதிமுகாமில் வைத்து கிழமைக்கு கிழமை தரும் பணத்தை பெறுவதுக்காகவே வரிசையில் நிற்பதும், கடைக்கு அழைத்து சென்று பொருட்க்கள் வாங்குவதும், எப்போதாவது ஒருநாள் உயிர்க்கோழியை வாங்கி உரித்து சமைத்து சந்தோசமாக 
சாப்பிடுவதும், யாருடைய பிறந்த நாளையாவது “எப்போதோ ஒருநாள்” சந்தோசமாக கொண்டாடும் போது மட்டுமே, விருந்து போல் சாப்பிடுவதும், சென்சிலுவை சங்கத்தினால் தரப்படும் உடுப்புக்காக வரிசையில் நின்று வாங்குவதும், காசு கிடைத்ததும் ஊரில் உள்ள உறவுகளுடன் தொலைபேசியில் 
கதைப்பதுமான வாழ்க்கை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 19 நவம்பர், 2017

மாவீர் 2017 க்கான இரு இறுவெட்டுக்கள் பாசெலில் வௌியிடப்பட்டது

பாசெலில்   நேற்றைய தினம் சுவிஸ் Basel lausen(18.11.2017) நகரில் நடைபெற்ற திரு. கலைப்பரிதி அவர்களின் வரிகளுக்கு திரு. இசைப் பிரியன் அவர்களின் இசையில் உருவான இரு இறுவெட்டுக்கலான, காந்தளின் கனவு மற்றும் புறப்படும் புதுயுகம் ஆகிய இறுவெட்டுக்கள்
 வெளியிடப்பட்டுள்ளது,
இதில் யேர்மனியிலிருந்து மாவீரரின் அண்ணர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகனும் கலற்து கொண்டார் எமதுமாவீரர்கள் நினைவைசுமந்த பாடல்கள் மண்ணைநேசிக்கும் ஒவ்வெரு தமிழனும் கேட்கவேண்டிய பாடல்கள் எம்காவல் தெய்வங்களின் 
காணிக்கையாக!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 17 நவம்பர், 2017

மனித உரிமைகள் நிலைமைகள்பற்ரி சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, இப்போது தஞ்சம் கோரும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
அத்துடன் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 10 நவம்பர், 2017

சுவிசில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பயனுள்ள தகவல்

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும்.
Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.
ஆண்- பெண்களுக்கு இடையேயான சம்பள விகிதமும் இங்கு அதிகம், ஐரோப்பிய நாடுகளில் இங்கு தான் அதிகளவு வித்தியாசம் உண்டு. சமீபத்திய ஆய்வின் படி ஆண்களை விட பெண்களுக்கு 19.3 சதவிகிதம் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது, குறிப்பாக 
சுவிட்சர்லாந்து பெண்களை விட வெளிநாட்டை சேர்ந்த பெண்களுக்கு சம்பளம் குறைவு.வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் 20 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது, ஆகஸ்ட் 1ம் திகதி சுவிஸ் தேசிய தினத்தன்று அனைத்து மாகாணங்களிலும் விடுமுறை 
வழங்கப்பட்டாலும், மற்ற பொது விடுமுறைகள் மாகாணங்களை பொறுத்து வேறுபடுகிறது.
சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை/பணி இரண்டுக்கும்மான Balance-யை சமமான முறையில் கொண்டு செல்ல முடியும், இதன் காரணமாகவே உலகளவில் வாழ்வதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலிலும்
 இடம்பிடித்துள்ளது.
சுவிசின் சட்டப்படி, நிறுவனம் தொழிலாளரை ஒரு வாரத்திற்கு 45 மணிநேரம் பணியாற்ற அழைக்கலாம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அதிகம். பிரான்சில் வாரத்திற்கு 35 மணிநேரமும், பிரித்தானியாவில் 36.5 மணிநேரமும் பணியாற்றுகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு வேலை செய்த பின்னர், வேலையை இழந்துவிட்டால் அவர்களுக்கு அதிகளவான சலுகைகள் கிடைக்கும், இதேபோன்று ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கும்
 அதிகமாக
 பணியாற்றினால் குறித்த நிறுவனம் உங்களுக்கான விபத்து காப்பீட்டை செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்காக 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது, தந்தைமார்களுக்கு பெரும்பாலும் குழந்தை பிறந்த அன்றைய தினம் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது, இதேபோன்று பணியாற்றும் தாய்மார்களாக இருப்பின் குழந்தை வளர்ப்புக்கும் அதிக தொகை செலவிட வேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Blogger இயக்குவது.