வியாழன், 26 நவம்பர், 2015

பர்தா அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடை!!!

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தடையை மீறி பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 ஸ்ரேலிங் பவுன் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு
 தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: பரிதாபமாக பலியான 100 பசுமாடுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கால்நடைகள் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 100க்கும் அதிகமான பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Kriessern என்ற நகரில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Lehenstrasse என்ற பகுதில் கால்நடைகள் பண்ணை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த பண்ணையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பண்ணையில் பற்றிய தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கு பரவியதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்துள்ளது.
தகவல் பெற்று வந்த தீயணைப்பு வீரர்கள் பண்ணையில் இருந்து 8 பசுமாடுகள் மற்றும் 19 கன்றுகளை மட்டுமே உயிருடன் மீட்க 
முடிந்துள்ளது.
எஞ்சிய 100க்கும் அதிகமான பசுமாடுகள் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
தீவிபத்தில் ஒட்டுமொத்த பண்ணையும் எரிந்து சாம்பலாகி போயுள்ளதால் சுமார் 1 மில்லியன் பிராங்குகள் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு அப்பகுதி பொதுமக்களிடம் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>




வெள்ளி, 20 நவம்பர், 2015

அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிய சிறுமிகளை செல்பியில் புகைப்படம் எடுத்த நபர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 சிறுமிகளை காப்பாற்றாமல் அவர்கள் அருகில் நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Aigle என்ற நகரில் தான் இந்த கொடூர காட்சி அரங்கேறியுள்ளது.
நகரன் மையத்தில் இருந்த சாலை ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை அன்று 10 மற்றும் 11 வயதுடைய சிறுமிகள் 3 பேர் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து சென்றுள்ளனர்.
சாலையின் ஓரத்தில் இருந்த நடைமேடையில் நடந்து சென்ற சிறுமிகளை நோக்கி வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று திடீரென
 மோதியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த 50 வயதான கார் ஓட்டுனர் உடனடியாக காரை விட்டு இறங்கி வந்துள்ளார்.
அப்போது, விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் 
ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பதில், விபத்தில் அடிப்பட்டு கீழே கிடந்த சிறுமிகளை கான கூட்டம் கூடியுள்ளது.
கூடிய கூட்டத்தில் இருந்த மக்கள் சிறுமிகளை காப்பாற்றுவதற்கு பதிலாக, அவர்களை புகைப்படம் எடுக்க தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர், கீழே குணிந்து அடிப்பட்ட சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறிது நேரத்தில் தகவல் அறிந்து பொலிசார் வந்தபோது, எவ்வித காரணமின்றி பொலிசாரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
நிலமையை உணர்ந்து அதிக எண்ணிக்கையில் பொலிசாரை வரவழைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அடிப்பட்ட சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
3 சிறுமிகளில் இருவர் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், Eglantina(11) என்ற சிறுமி கடந்த புதன் கிழமை முழுவதிலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
சாலையில் சிறுமிகள் 3 பேர் அடிப்பட்டுள்ள நிலையில், அவர்களை காப்பாற்றாமல் புகைப்படும் எடுத்துக்கொண்டு சிலரின் நடவடிக்கைகள் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சாலையில் நிகழ்ந்த கோர விபத்து ஓட்டுனர்உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் வாகனத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸில் உள்ள St. Gallen நகரை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயணம் செய்துள்ளார்.
அதிகாலை நேரத்தில் A13 சாலை வழியாக Margrethen நகர் நோக்கி அவர் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது, நபரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக சறுக்கியவாறு சென்று சாலையோறம் இருந்த தடுப்பு சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளார்.
சுவறின் மீது மோதிய வேகத்தில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர், பல அடி தொலைவில் சென்று விழுந்துள்ளார்.
இந்த பயங்கர காட்சியை கண்ட சிலர், விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
சுவிஸின் மீட்பு குழுவினரான Rega-விற்கு தகவல் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களில் விபத்து பகுதிக்கு வந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், ஓட்டுனருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலையில் மீட்பு பணிகள் நடைபெற்ற வந்ததால், சில மணி நேரங்களுக்கு A13 சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தை நேரில் கண்ட நபர்களிடம் தகவல்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

துணை தலைவி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து சுவிட்சர்லாந்தின் மாற்று கீறின் கட்சியின் துணை தலைவி அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
Zug பிராந்திய நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினராக தொடர்ந்தும் இருக்க எண்ணியுள்ள Jolanda Spiess-Hegglin என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த நிலையில் தாம் சார்ந்த கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ள அவர், ஒரு சுதந்திரமான அரசியலை தொடர விரும்புவதாகவும் Jolanda Spiess-Hegglin 
கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு திசம்பரில் Zug பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்ட சுவிஸ் மக்கள் கட்சியின் Zug பிராந்திய முன்னாள் தலைவர் Markus Hurlimann போதை மருந்தை கலந்து தந்து Jolanda ஐ பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட அனைத்து மருத்துவ சோதனைகளிலும் இருவரும் பாலியல் உறவு கொண்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே Jolanda Spiess-Hegglin மற்றும் Markus Hurlimann ஆகியோர் உடனடியாக Zug பிராந்திய நாடாளுமன்றத்தில் இருந்து பதவி விலக வேண்டும் என பிராந்தியத்திலுள்ள பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி 
வந்துள்ளனர்.
ஆனால் அந்த கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ள Jolanda தாம் இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், குறிப்பாக, பெண்கள் உரிமை, குடும்ப நலம், மற்றும் பாலியல் சமத்துவம் போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 நவம்பர், 2015

பெண்கள் சுவிஸ்லாந்தில் குட்டைப் பாவாடைஅணியத்தடை!!!

சுவார்சயமான சுவிஸ்லாந்தில் ஒரு சம்பவத்தினைஅரசு  கொண்டுவந்திருக்கிறது. குறிப்பாக சுவிஸ்லாந்தில் பெண்கள், குட்டைப் பாவாடை மற்றும் இடுப்பு , உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டஆடைகளை அணிபவர்கள் 6 மாத சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் இவ்வாறான குட்டைப் பாவாடைகள் மற்றும் உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதானது பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் அமைவதால் இவ்வாறான ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பெண் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
‘உடல் அங்கங்கள் தெரியும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்படுகிறது’ பழமைவாத சட்டமானது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக சுவாஸிலாந்து பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சுவாசிலாந்தில் மூன்றில் இரண்டு வீதமான  வயது பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுவதாக ஊடக அறிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சமத்துவ உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கோரி கடந்த மாதம் இந்நாட்டு பெண்கள் சுவாசிலாந்தின் இரண்டாவது நகரமான மன்சாரி நகரில் 
ஊர்வலம் சென்றனர்.
இவ்வாறான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதா சுவாசி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
‘தடைவிதிக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்கள் கைது செய்யப்படுவர்’ என  பொலிஸ் பெண் பேச்சாளர் வென்டி ஹெல்டா எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.
பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிவதால் எதிரிகளுக்கு மிகவும் சுலபமாக அமைந்துவிடுகின்றது. பெண்கள இந்த பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொள்வதை எம்மால் ஊக்குவிக்க முடியாது. மக்கள் இவ்வாறான விடயங்களை கவனித்தில்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிவதற்கு அனுமதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவுசுவிஸ் பேர்ண் மாநகரில்---

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று 
வருகின்றது.
பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி
 வைக்கப்படும்.
தெரிவுக் குழுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகளுக்கு வருகை தந்து அவதானங்களை மேற்கொண்டு அந்த விபரங்களை அடிப்படையாக வைத்தே இறுதி முடிவை எட்டுவார்கள்
அத்தகைய தெரிவில் தமிழரான செல்வன் அருளானந்தம் மரிய அனோஜ் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டு புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பேர்ண் - பெத்லகேமில் வசிக்கும் அருளானந்தம்(வின்சன்) சந்திரவதனா தம்பதிகளின் ஏக புதல்வனான மரிய அனோஜ் சுவிஸ் நாட்டிலேயே பிறந்தவர் என்பதுவும் வெளிநாட்டுப் பிள்ளைகள் அதிகமாக வாழும் பிராந்தியத்தில் வசிப்பவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
சுவிற்சர்லாந்து பல்கலைக் கழகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வில் சுவிசில் வாழும் 148 பிறநாட்டு இனங்களுள் முதன்மைபெற்ற இனமாக தமிழ் இனம் விளங்குவதாகவும் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் நாட்டின் உயர் பதவிகளில் 35 வீதமானவற்றை தமிழ் இளையோரே வகிப்பர் எனவும் எதிர்வு கூறியுள்ளமையும் நினைவிற் கொள்ளத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 3 நவம்பர், 2015

கலைவாணி விழா 24 வது பாசல் தமிழ்ப் பாடசாலையின்

பாசல் தமிழ்ப் பாடசாலையின் 24 வது கலைவாணி விழாவில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் அப்பாடசாலையின் பழைய மாணவனாகவும் கௌரவ அறிவிப்பாளராகவும் கலந்துகொண்ட வேளை.
 இதுவே
சுவிற்சர்லாந்தில் முதலாவதாக சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஆரம்பநாளன்று கல்விபயில ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். 
எனது ஒவ்வொரு கலைமுயற்சிகளினதும் அரங்கேற்ற மேடையாக திகழ்ந்தது இந்த மேடையே
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சுவிஸ் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலில் பின்னடைவு

சுவிஸில் உள்ள லூசெர்ன் நகரத்தில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள Education First (EF) என்ற நிறுவனம் 2015ம் ஆண்டில் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 70 நாடுகளில் உள்ள சுமார் 9,10,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கடந்த ஆண்டு 18ம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து 19வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் சுவீடனும், 2வது மற்றும் 3வது இடங்களில் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் 
இடம்பெற்றுள்ளன.
ஆங்கில மொழி திறமையை சிறப்பாக வளர்க்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:
1.சுவீடன் 2.நெதர்லாந்து 3.டென்மார்க் 4.நோர்வே 5.பின்லாந்து 6.ஸ்லோவேனியா 7.ஈஸ்டோனியா 8.லக்ஸம்பர்க் 9.போலந்து 
10.ஆஸ்திரியா
இதே பட்டியலில் ஆசிய நாடுகளான இந்தியா 20வது இடத்திலும், இலங்கை 49வது இடத்திலும் உள்ளன. ஆய்வில் எடுக்கப்பட்ட 70 நாடுகளில் ஆங்கில மொழி திறனில் மிகவும் பின் தங்கியுள்ள நாடாக லிபியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சட்டவிரோதமாக பே ருந்தில் மதுபானம் கடத்தியவர் கைது!!!

சுவிஸ் எல்லைப்பகுதியில் உள்ள ட்ராம் வாகனத்தின் 8ம் வழித்தடத்தில் எல்லை பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருக்கைகளுக்கு பின்புறம் எண்ணற்ற பைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பொலிசார், அவற்றை திறக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதில், பிராந்தி மற்றும் விஸ்கி வகைகளை சேர்ந்த 21 லிற்றர் மதுபானம் 30 பாட்டில்களில் கடத்தப்பட்டிருந்தது 
கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து பேசிய Patrick Gantenbein என்ற பொலிஸ் அதிகாரி, அதிக பைகளில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததால், அதனை கண்டுபிடிக்க முடியாதவாறு, இருக்கையின் பின்புறத்தில் சில பைகளை மறைத்து வைத்துள்ளனர்.
பேருந்துகளில் நபர் ஒருவருக்கு ஒரு லிற்றர் மதிப்புள்ள மதுபானம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி உள்ளதால், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன.
கடத்தலில் ஈடுபட்ட 38 வயதான பேசல் நகரை சேர்ந்த ஒருவரையும் அவருடன் பயணித்த மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.