சுவிஸ் எல்லைப்பகுதியில் உள்ள ட்ராம் வாகனத்தின் 8ம் வழித்தடத்தில் எல்லை பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருக்கைகளுக்கு பின்புறம் எண்ணற்ற பைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பொலிசார், அவற்றை திறக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதில், பிராந்தி மற்றும் விஸ்கி வகைகளை சேர்ந்த 21 லிற்றர் மதுபானம் 30 பாட்டில்களில் கடத்தப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து பேசிய Patrick Gantenbein என்ற பொலிஸ் அதிகாரி, அதிக பைகளில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததால், அதனை கண்டுபிடிக்க முடியாதவாறு, இருக்கையின் பின்புறத்தில் சில பைகளை மறைத்து வைத்துள்ளனர்.
பேருந்துகளில் நபர் ஒருவருக்கு ஒரு லிற்றர் மதிப்புள்ள மதுபானம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி உள்ளதால், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன.
கடத்தலில் ஈடுபட்ட 38 வயதான பேசல் நகரை சேர்ந்த ஒருவரையும் அவருடன் பயணித்த மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக