ஞாயிறு, 15 நவம்பர், 2015

சாலையில் நிகழ்ந்த கோர விபத்து ஓட்டுனர்உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் வாகனத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸில் உள்ள St. Gallen நகரை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயணம் செய்துள்ளார்.
அதிகாலை நேரத்தில் A13 சாலை வழியாக Margrethen நகர் நோக்கி அவர் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது, நபரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக சறுக்கியவாறு சென்று சாலையோறம் இருந்த தடுப்பு சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளார்.
சுவறின் மீது மோதிய வேகத்தில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர், பல அடி தொலைவில் சென்று விழுந்துள்ளார்.
இந்த பயங்கர காட்சியை கண்ட சிலர், விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
சுவிஸின் மீட்பு குழுவினரான Rega-விற்கு தகவல் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களில் விபத்து பகுதிக்கு வந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், ஓட்டுனருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலையில் மீட்பு பணிகள் நடைபெற்ற வந்ததால், சில மணி நேரங்களுக்கு A13 சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தை நேரில் கண்ட நபர்களிடம் தகவல்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.