சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கால்நடைகள் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 100க்கும் அதிகமான பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Kriessern என்ற நகரில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Lehenstrasse என்ற பகுதில் கால்நடைகள் பண்ணை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த பண்ணையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பண்ணையில் பற்றிய தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கு பரவியதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்துள்ளது.
தகவல் பெற்று வந்த தீயணைப்பு வீரர்கள் பண்ணையில் இருந்து 8 பசுமாடுகள் மற்றும் 19 கன்றுகளை மட்டுமே உயிருடன் மீட்க
முடிந்துள்ளது.
எஞ்சிய 100க்கும் அதிகமான பசுமாடுகள் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
தீவிபத்தில் ஒட்டுமொத்த பண்ணையும் எரிந்து சாம்பலாகி போயுள்ளதால் சுமார் 1 மில்லியன் பிராங்குகள் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு அப்பகுதி பொதுமக்களிடம் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக