வியாழன், 14 ஜூலை, 2016

இலங்கை குடிமக்களுக்குபுகலிடம் வழங்க கடும் கட்டுப்பாடுகள்:?

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக
 அறிவித்துள்ளது.
சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகள் தற்போது ஓரளவிற்கு சீரடைந்துள்ளது என சுவிஸ் அரசு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
’’தற்போது இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. குறிப்பாக, கருத்து சுதந்திரம், பொது இடங்களில் கூடுவது உள்ளிட்ட மனித உரிமைகள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிப்பதற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என அந்த அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளும் தற்போது குறைந்து வருகிறது.
எனினும், மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்களில் முன்னேற்றம் இல்லை என்பதால், தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும்போது தனிக்கவனம் செலுத்தப்படும்.
நடப்பாண்டு மே மாதம் இறுதி வரை 5,000 இலங்கை குடிமக்கள் சுவிஸில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3,674 நபர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
1,316 நபர்களின் புகலிடக் கோரிக்கை மனுக்கள் தற்போது நிலுவையில் உள்ளன. மேலும், 1,613 நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், இவர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழலில் உள்ளனர்.
ஈழத்தமிழர்களுக்கான சுவிஸ் கவுன்சிலின் துணை தலைவரான Anna Annor என்பவர் 47 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ’’இலங்கை நாட்டிற்கு திரும்பிச் செல்லும் தமிழர்கள் அனைவரையும் ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு’ ஆதரவானவர்கள் என அந்நாட்டு அரசு முடிவு செய்கிறது.
இதன் விளைவாக, கொழும்பு விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறையிலும் அடைக்கப்படுகிறார்கள்.
2009ம் ஆண்டு யுத்தத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களில் பலரை அந்நாட்டு அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை.
எனினும், கடந்த 2014ம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் சூழல்கள் மாறியுள்ளன. கடந்த ஜனவரி முதல் பெப்ரவரி வரை இலங்கை நாட்டிற்கு திரும்பியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை குடிமக்கள் மீது கடுமையான நிபந்தனைகள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 7 ஜூலை, 2016

கழுகுக்கு புறாவை பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்?

சுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக்கு இறையாக்கிய நபருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 6 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் சூரிச் நகருக்கு அருகில் உள்ள Dielsdorf பகுதியை சேர்ந்த போலியான சமூக ஆர்வலர் மீதான குற்றம் தான் தற்போது
 நிரூபிக்கப்பட்டுள்ளது.
42 வயதான இவர் சுமார் 200 புறாக்களை வளர்த்து வருகிறார். புறாக்களை வானத்தில் பறக்கவிட்டு அவை எவ்வளவு நேரம் தரைக்கு திரும்பாமல் பறந்திருக்கும் என்பதை நிரூபிக்கும் போட்டியிலும் இவர் பங்கேற்று வந்துள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்க இவர் தனது புறாக்களுக்கு நீண்ட நேரம் பறக்கும் பயிற்சியை அளித்து வந்துள்ளார்.
ஆனால், கழுகை போன்ற ராஜாளிப்பறவைகள் புறாவை நடுவானில் கொன்றுவிடுவதால் அந்த ராஜாளிப்பறவைகளை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்தாண்டு புறா ஒன்றின் உடல் மீது கடுமையான விஷத்தை தடவி வானத்தில்
 பறக்கவிட்டுள்ளார்.
இவர் எதிர்ப்பார்த்தது போல் ராஜாளிப்பறவை ஒன்று புறாவை வேட்டையாடி தின்றுள்ளது.
துரதிஷ்டவசமாக புறாவின் உடலில் இருந்த விஷத்தால், அந்த ராஜாளி பரிதாபமாக பலியானது. சுவிஸ் நாட்டில் ராஜாளிப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பறவைகளை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெயர் வெளியிடப்படாத அந்த நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில தினங்களில் தீர்ப்பில் அவருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 4,000 பிராங்க் (6,03,447 இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 2 ஜூலை, 2016

தமிழர் பண்பாட்டு உடையில் வந்து மாநகர சபையின் உறுப்பினர் திருமதி தர்ஷிகா

சுவிஸ்தமிழர் பண்பாட்டை மறந்து வாழ்வோர் மத்தியில் இவர் தமிழர் பண்பாட்டு உடையில் வந்து எமது பாரம்பரியத்தை வெளிக்காட்டியுள்ளார்..
சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார்.
அப்போது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், இன்றிலிருந்து எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் முடிந்த நல்ல சேவைகளை செய்வேன் என கூற கடமைப்பட்டுள்ளேன்.
சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், படிப்பு, பிள்ளைகள், குடும்பம் என இந்த விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து பாடுபடுவேன் என்பதை கூற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

Blogger இயக்குவது.