திங்கள், 30 டிசம்பர், 2013

தாமதமாக வருகை தந்த வெள்ளை கிறிஸ்துமஸ்

சுவிஸின் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில் அமையும் வெள்ளை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு சற்று தாமதமாகவே அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் திகதி ஆல்ப்ஸ் மலையின் வடக்கு பகுதியில் 20 முதல் 40 சென்டீமீற்றர்கள் பனியால் சூழப்பட்டது என RTS செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

“பாக்சிங் டே” என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளில் உயர்ந்த மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வெள்ளை கம்பளத்தை விரித்தது போல பனி படர்ந்து அழகாய் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து தெற்கு இத்தாலிய பேசும் காண்டனில் ஒரு மீற்றர் தூரத்திற்க்கு பனி படர்ந்திருந்தது.

இதுகுறித்து பனிச்சரிவு ஆய்வாளர்கள் கூறுகையில், சுவிஸில் பனியின் தாக்கம் 120 செண்டிமீட்டராய் பதிவாகியுள்ளது. கடந்த 61 ஆண்டுகளாய் வரலாறு காணாத அளவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில் டிக்கினோவில் குறைந்த தட்பவெப்பத்தால் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்சிங் டே ஆகிய தினங்களில் பிற்பகல் வரை தொடர் கனமழை பெய்தது. இதனால் லுகானூ ஏரிக்கு அபாயம் உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இக்கனமழை புயலாக மாறி மத்திய சுவிஸ் பகுதி,வாயூத் என்ற மாவட்டம் மற்றும் சில நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுவிஸை உலுக்கிய புயல்காற்று

சுவிஸில் கடும் புயல்காற்று வீசியதால் நேற்றைய கிறிஸ்துமஸ் தினத்தில் மலைரயில் மற்றும் கேபிள்கார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கடும் புயல் ஐரோப்பாவின் மிக உயரமான ரயில்வே என்ற பெருமையை கொண்ட தலைநகரம் பேர்னில் இருக்கும் ”ஜங்க்ப்ராவ் இரயில் நிலையத்தில்” இரயில் பாதைகள் கடும் பாதிப்பிற்குள்ளானது.
இந்நிலையில் இங்கு ரயில் ஒன்று வீட்டின் மீது மோதி அவ்வீடு

 புயல் காற்றினால் தள்ளப்பட்டு ரயில் பாதையில் வந்து விழுந்தது.இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் மத்திய சுவிஸில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பின்பு கிறிஸ்துமஸ் தினமான நேற்று சரி செய்யப்பட்டது.

இப்புயலின் தாக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது, மத்திய சுவிஸில் புயல் காற்றின் சீற்றம் 208 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது. பின்பு கிறிஸ்துமஸின் முந்தைய இரவு ரைன் பள்ளதாக்கில் 110 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது.

மேலும் நேற்று குளிர்பனி படர தொடங்கியதால் புயல்காற்று நின்று உடனே மழையும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தியது. இதன் பின்னர் சுவிஸில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
 

புதன், 25 டிசம்பர், 2013

சுவிஸில் தஞ்சமடைய ரஷ்ய தொழிலதிபர் முயற்சி


ரஷ்யா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் கோடோர்கோவ்ஸ்கி சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த கோடோர்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் நிதிமோசடியில் ஈடுபட்டதால் ரஷ்ய அரசு இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவதாக இருந்த இவர் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதினால் மன்னிக்கப்பட்டு கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் மனைவி மற்றும் இரட்டை மகன்கள் ஜேர்மனில் வசித்து வருகின்றனர். இதையடுத்து ஜேர்மன் சென்ற இவருக்கு ஜேர்மன் அரசாங்கம் ஒரு வருட காலமே தங்குவதற்கு அவகாசம் அளித்துள்ளது
இதனால் தன் சொத்துகளை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு குடும்பத்தினருடன் சுவிஸில் நிரந்தரமாக தங்குவதற்காக சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் தன் 10 வருட சிறைவாசத்தை குறித்து தான் மிகவும் வெட்கப்படுவதாகவும் பல வேதனைகளை அனுபவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தலைமறைவாகிய சுவிஸ் வங்கி நிறுவனர்

வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் வங்கியின் நிறுவனரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரான்சின் முன்னாள் வரவு செலவு திட்ட நிதியமைச்சர் ஜெரோம் ஆசாக்.
இவர் தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருந்தார்.
இதன் பின் பொலிசார் ரெய்டின் போது பணத்தை குறித்த நிறுவனர் Dominique Reyl என்பவரின் கணக்கில் மாற்றிவிட்டு, தான் தப்பிக்கும் வகையில் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளர் பியரி கோண்டமிரி மூலம் பிரான்ஸ் அரசியல்வாதிகளின் ரகசிய கணக்குகள் அம்பலமானது.

இதனையடுத்து Dominique Reyl மீது ஊழலுக்கு துணையாக இருந்தார் என்ற பெயரில் வழக்கு தொடரப்பட்டதுடன், கடந்த டிசம்பர் 11ம் திகதி மேஜிஸ்டிரேட்டால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

மேலும் விசாரணைக்கு வராமல், அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு கொடுக்காமல் இந்நிறுவனர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு தலைமறைவானதால் பொலிசார் இவரை பிடிக்கும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

சனி, 21 டிசம்பர், 2013

பேச்சுரிமையை இழந்த பேச்சாளர்: சுவிஸ் தடாலடி

சுவிட்சர்லாந்தில் எகிப்திய போதகரின் கடுமையான சொற்பொழிவை கண்டித்து அந்நாட்டு அரசு, அவர் சொற்பொழிவாற்ற தடை விதித்துள்ளது.
 சில மாதங்களுக்கு முன்பு சுவிஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இஸ்லாம் மதத்தை மறந்து அதன் நம்பிக்கையை துறக்கும் இஸ்லாமியர்களுக்கு மரண தண்டனையே உகந்த தண்டனையாகும் என தடாலடியாக அறிக்கையை விடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து ”சுவிஸ் சூப்பர் லீகின்” மற்றும் ”பேசல் கால்பந்தாட்ட குழுவின்” முக்கிய கால்பந்தாட்ட வீரரான எகிப்திய வீரரையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற சொற்பொழிவுகள் இன்னும் தொடர்ந்தால் கலவரம் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது என்பதால் ஜெனிவாவில் கடந்த சனிக்கிழமையன்று நடக்கவிருந்த அவரின் மற்றொரு சொற்பொழிவு மாநாட்டை சுவிஸ் பொலிசார், கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் மத்திய இடம்பெயர்த்தல் அலுவலகம் தடை செய்துள்ளது.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

விலைமாதுக்களுக்கு அல்வா கொடுத்த மோசடி மன்னன்

 ஜெனிவாவில் 20க்கும் மேற்பட்ட விலைமாதுக்களிடம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் 3 மில்லியன் பிராங்குகளை மோசடி செய்துள்ளனர்.
ஜெனிவாவில் 40 வயது நிரம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் மசாஜ் பார்லர்களில் வேலை செய்யும் பெண்களை குறிவைத்து தம் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இப்போலி ஆசாமி அப்பெண்களிடம் நிலம் மற்றும் சொத்துக்களை விற்பதாக கூறி போலி வரைபடங்கள், புராஜட்கள் மற்றும் பத்திரங்களையும் காண்பித்து இதற்கு முதலீடாக பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம்பரித்துள்ளான்.

ஆனால் RTS என்ற தொலைக்காட்சியின் அறிக்கையில் ”தனக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் நான் இதற்கு பொறுப்பேற்க இயலாது என அவர் கைவிரித்துள்ளார்.
இதனால் இவரிடம் ஏமாந்த பெண்கள் தங்கள் வாழ்வாதார சேமிப்பை இழந்துள்ளனர்.
மேலும் இப்பெண்களிடம் சுருட்டிய பணத்தையெல்லாம் இம்மோசடி மன்னன் செலவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

புதன், 18 டிசம்பர், 2013

லீலைமன்னனின் ஆட்டத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி

 சிறுமிகளை சீரழித்து வந்த நீதி மேலாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெனிவாவை சேர்ந்த 64 வயது மதிக்கதக்க நீதிமேலாளர் ஒருவர், பட்டியலிட்டு கூறும் அளவில் பல சிறுமைகளை திட்டமிட்டு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் நியான் மாநகராட்சியில் கிளாண்ட் என்ற இடத்தில் 11 வயது சிறுமியிடம் பழுது பார்க்க வந்த பணியாளை போல் நடித்து வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் அச்சிறுமையை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து நீச்சல்குளத்தில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றபோதும் தண்டிக்கப்பட்டார்.

மேலும் கடந்தாண்டு மற்றொரு சிறுமியை பாலத்காரம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பெடோபைல் என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த 64 வயது மனிதர் தண்டனை காலம் முடியும் முன்பே உயிர் துறப்பார் என்றும் ஓன்லைன் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 

கொலைகுற்றத்தால் மனம் நொந்த காதலி

 சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் தன் காதலனை கொலை செய்த குற்றத்திற்காக வருந்துவதாக தொலைக்காட்சி செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் பிரான்சை சேர்ந்த தன் காதலரான வங்கியாளரை கடந்த 2005ம் ஆண்டு சுட்டு கொன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு 8 அரை வருடம் சிறை தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்பளித்தது.

அதில் ஏற்கனவே 4 வருடங்கள் அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைகாட்சியில் அவர் வெளியிட்ட செய்தியில், இக்கொலை சம்பவம் நிகழ்ந்த போது தன் மனநிலை சரியில்லை என்றும் தான் எழுதிய கடிதம் தொலைகாட்சி செய்தி எந்நேரத்தில் வெளியானது என எனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இப்பிரெஞ்சு வங்கியாளர் மிக பெரும் செல்வந்தர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கேலஸ் சர்கோசியின் நெருங்கிய நண்பரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
 

திடீர் தீவிபத்து: சிரமத்திற்குள்ளான இருவர்

சுவிசின் சூரிச் மாகணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் இரண்டு பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஏற்பட்ட கட்டிட தீவிபத்தில் மூன்றுமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியின் மேல் தீப்பற்றி கொண்டது.

இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பெரும் போராட்டத்திற்கு பின்பே தீயை அணைக்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.

மேலும் இத்தீவிபத்தால் மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டு தளங்களும் சாம்பலாகி கருகிவிட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

பணம் கொழிக்கும் நிலத்தடி பாதுகாப்பு வர்த்தகம்

டெல் டாவிஸ் என்ற உயர் தொழிற்நுட்ப தகவல் விபரங்களை பாதுகாக்கும் நிலையம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையருகில் நிலத்தடி சுரங்கப் பாதையில் இயங்கி வருகின்றது.
இந்த நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸ் வங்கிகளில் இரகசியமான வங்கி கணக்குகளை வைத்திருக்கும் விபரங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அதன் உரிமையாளர்களை தவிர வேறு எவரும் பெறமுடியாது. இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியவை.

“பயோமெட்ரிக் ” கைரேகை ஸ்கேனர்கள், ஆயுதம் தாங்கிய காவலர்கள், எஃகுவினால் ஆனா நான்கு டொன் எடை கொண்ட பாதுகாப்பு பெட்டகம் (ஆயுத தாக்குதல்களை தாங்கக் கூடியது)உள்ளது.
இதன் கதவுகளுக்கு பின்னர் தகவல்களின் விபரங்கள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
தமது விபரங்களை பாதுகாத்து வைத்துள்ள நபர்கள் அதற்கான சேவை வாடகை பெரும் தொகையாக இருந்தாலும் அது பற்றி பொருட்படுத்துவதில்லை.

விபரங்கள் கசிய 100 வீதம் சாத்தியமில்லை என்பதே இதற்கான காரணம். இந்த இரகசிய தகவல் விபர பாதுகாப்பு நிலையம் போன்று சுவிட்சர்லாந்தில் 55 நிலையங்கள் உள்ளன.
இதனால் சுவிட்சர்லாந்தின் நிலத்தடி சுரங்க பாதையில் அமைந்துள்ள தகவல் விபரப் பாதுகாப்பு பெட்டக வியாபாரம் மூலம் பணம் கொழித்து வருவது ஆச்சரியமான விடயமில்லை.
 

வியாழன், 5 டிசம்பர், 2013

ஜேர்மனில் மரணங்கள் குறித்து ஆய்வு!

ஜேர்மன் நாட்டில் கிட்டத்தட்ட 750 பேர் வலதுசாரி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனில் 1990 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 849 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் தற்போதைய புள்ளி விபரத்தின் படி 60 நபர்கள் வலதுசாரி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனால் இந்த தொடர்கொலைகளுக்கு ‘நியோ நாசி’ என்கிற நாசி தீவிரவாத அமைப்பினரே காரணம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடந்து 16 மாநிலங்களில் ஜேர்மன், நாசி தீவிரவாத அமைப்பிற்கும், பிற தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடக்கின்றது.
 

திங்கள், 2 டிசம்பர், 2013

பணக்கார பட்டியலில் ‘காம்ப்ராட்’ குடும்பம்

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்ட பணக்கார பட்டியலில் காம்ப்ராட் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.

சுவிஸ் வணிக இதழ் அந்நாட்டைச் சேர்ந்த 300 செல்வந்தர்கள் மத்தியில் அவர்களின் வருவாயின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சுவிஸ்நாட்டைச் சேர்ந்த இம்ராட் காம்ப்ராட்(74) என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
பல்வேறு வகையான தொழில்களை செய்து வரும் இவர் கடந்த 2013 ஆண்டில் 45 முதல் 46 பில்லியன் பிராங்க் வருமானத்தை ஈட்டியுள்ளார்.

இவரது தொழிலுக்கு இவருடைய மூன்று மகன்களும் உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகின்றனர்.
Blogger இயக்குவது.