புதன், 18 டிசம்பர், 2013

பணம் கொழிக்கும் நிலத்தடி பாதுகாப்பு வர்த்தகம்

டெல் டாவிஸ் என்ற உயர் தொழிற்நுட்ப தகவல் விபரங்களை பாதுகாக்கும் நிலையம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையருகில் நிலத்தடி சுரங்கப் பாதையில் இயங்கி வருகின்றது.
இந்த நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸ் வங்கிகளில் இரகசியமான வங்கி கணக்குகளை வைத்திருக்கும் விபரங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அதன் உரிமையாளர்களை தவிர வேறு எவரும் பெறமுடியாது. இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியவை.

“பயோமெட்ரிக் ” கைரேகை ஸ்கேனர்கள், ஆயுதம் தாங்கிய காவலர்கள், எஃகுவினால் ஆனா நான்கு டொன் எடை கொண்ட பாதுகாப்பு பெட்டகம் (ஆயுத தாக்குதல்களை தாங்கக் கூடியது)உள்ளது.
இதன் கதவுகளுக்கு பின்னர் தகவல்களின் விபரங்கள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
தமது விபரங்களை பாதுகாத்து வைத்துள்ள நபர்கள் அதற்கான சேவை வாடகை பெரும் தொகையாக இருந்தாலும் அது பற்றி பொருட்படுத்துவதில்லை.

விபரங்கள் கசிய 100 வீதம் சாத்தியமில்லை என்பதே இதற்கான காரணம். இந்த இரகசிய தகவல் விபர பாதுகாப்பு நிலையம் போன்று சுவிட்சர்லாந்தில் 55 நிலையங்கள் உள்ளன.
இதனால் சுவிட்சர்லாந்தின் நிலத்தடி சுரங்க பாதையில் அமைந்துள்ள தகவல் விபரப் பாதுகாப்பு பெட்டக வியாபாரம் மூலம் பணம் கொழித்து வருவது ஆச்சரியமான விடயமில்லை.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.