புதன், 25 டிசம்பர், 2013

தலைமறைவாகிய சுவிஸ் வங்கி நிறுவனர்

வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் வங்கியின் நிறுவனரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரான்சின் முன்னாள் வரவு செலவு திட்ட நிதியமைச்சர் ஜெரோம் ஆசாக்.
இவர் தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருந்தார்.
இதன் பின் பொலிசார் ரெய்டின் போது பணத்தை குறித்த நிறுவனர் Dominique Reyl என்பவரின் கணக்கில் மாற்றிவிட்டு, தான் தப்பிக்கும் வகையில் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளர் பியரி கோண்டமிரி மூலம் பிரான்ஸ் அரசியல்வாதிகளின் ரகசிய கணக்குகள் அம்பலமானது.

இதனையடுத்து Dominique Reyl மீது ஊழலுக்கு துணையாக இருந்தார் என்ற பெயரில் வழக்கு தொடரப்பட்டதுடன், கடந்த டிசம்பர் 11ம் திகதி மேஜிஸ்டிரேட்டால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

மேலும் விசாரணைக்கு வராமல், அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு கொடுக்காமல் இந்நிறுவனர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு தலைமறைவானதால் பொலிசார் இவரை பிடிக்கும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.