வெள்ளி, 19 ஏப்ரல், 2024

நூதன முறையில் சுவிஸ் நாட்டில் திருடிய ரொமேனிய நாட்டு திருடர்கள் கைது

 அண்மை காலங்களிலே சுவிசர்லாந்து நாட்டிலே இந்து ஆலயங்களை குறிவைத்து கொள்ளை குழு ஒன்று கொள்ளையடித்து சென்றதாக தகவல்களை அறிந்திருக்கிறோம். லங்கா4 ஊடகத்திலும் அதனை நாங்கள் பிரசுரித்து இருக்கிறோம்.
 அந்த கொள்ளை குழு ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இந்த கொள்ளைக் குழு வேறு இடத்தில் கைவரிசை காட்டிக் கொண்டிருக்கின்ற பொழுது சுவிட்சர்லாந்தில் LUZERN மாநில பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள்.
 இந்த குழுவில் இருந்த அனைவரும் அவர்கள் அந்த
 கொள்ளையை முறையே கற்றவர்களாக காணப்பட்டு இருக்கிறார்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் 
தங்களுடைய அந்த
 அனுபவங்களை பயன்படுத்தியும் இவர்கள் கொள்ளை அடித்து சென்றிருக்கிறார்கள். அதன் பிற்பாடு இவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் சுவிட்சர்லாந்து 
நாட்டுக்குள்ளே வந்து தொழில் செய்பவர்களாக அறிமுகமாகி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டிலே வாகனங்களை வாங்கி 
விற்பவர்களாக அடையாளம் காட்டி இவர்கள் இந்த 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆலயங்களில் இவர்கள் கை வரிசையை காட்டி இருக்கிறார்கள். 
அந்த 10 ஆலயங்களுக்கும் இவர்களை கைது செய்ததன் பிற்பாடு பொலிசார் உத்தியோகபூர்வமாக அவர்கள் அறிக்கை ஒன்றை 
ஒவ்வொரு கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்பி 
வைத்திருக்கிறார்கள் இந்த கோவில்களிலே நடைபெற்ற கொள்ளையை பல கோவில்கள் மூடி மறைத்திருக்கின்றன காரணம் இந்த 
கோவில்களுக்கு மக்கள் செல்ல மாட்டார்கள் என்ற ஒரு 
பயத்திலும் மற்றும் மக்கள் பயந்து விடக்கூடாது 
அதாவது மக்களை பயமுறுத்தக்கூடாது என்ற ஒரு 
காரணத்தினாலும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் 
மறைக்கப்பட்டிருக்கின்றன பல ஆலயங்களிலே உண்டியல்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. 
பல ஆலயங்களிலே அம்மனில் போடப்பட்டிருந்த தாலிகள் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது சில 
வெண்கல சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது
 இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொரு திருவிழாக்களிலும் தங்களுடைய ஒத்திகையை பார்த்திருப்பதாகவும்
 அறியப்படுகிறது. 
ஒவ்வொரு கோவிகளிலும் பக்தர்கள் அதிகமாக கூடுகின்ற புது வருடப்பிறப்பு கந்த சஷ்டி விரதம் மற்றும் சில பௌர்ணமி அமாவாசை பூஜைகள் இப்படி அதிகமான மக்கள் கூடுகின்ற நேரங்களில் இவர்கள் தங்களுடைய உளவுகளை பார்த்ததாக அறியப்படுகிறது. இந்த நிலையில் இவர்களை 
சுவிஸ் பொலிஸார் கைது செய்து அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சில பொருட்களையும் சில நகைகளையும் சில பணங்களையும்
 மாத்திரம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது பல பொருட்கள் பல நகைகள் பல உடமைகள் அவர்கள் தங்களுடைய
 நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிசாரின் ஊடாக அறியப்படுகிறது.
 மற்றும் தொடர்ந்தும் இந்த கொள்ளைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கோவில் நிர்வாகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கோவில் திறக்கும் நேரம் பாதுகாப்புகள் இதனை 
பலப்படுத்துமாறும் பொலிசாரினால் இவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு ஒவ்வொரு கோவில்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
 கோவில் நிர்வாகங்களினுடைய அசம்பந்தப் போக்கும் இந்த கொள்ளைக்கு காரணம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது
 இருந்தும் இந்த கள்வர்கள் பிடிபட்டதனால் கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இனம் 
காட்டப்படுகின்ற
 சந்தர்ப்பத்தில் கோவில்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படலாம் 
 என்பது குறிப்பிடத்தக்கது     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.