வெள்ளி, 30 நவம்பர், 2018

தீப்பிடித்த்து சுவிட்சர்லாந்தில் ஆறு அகதிகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரைக் குடித்த நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக இருக்கலாம் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் இருபதுபேர் இருந்ததாகவும் பெரும்பாலோர் தீயணைப்புபடையினரால் மீட்கப்பட்டுவிட்டாலும் ஆறு பேரை மீட்க முடியாமல் போனதாகவும் பொலிசார்
 தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த தளத்தில் இருந்தவர்களை மட்டும் காப்பாற்ற இயலாமல் 
போய்விட்டதாக தெரிகிறது.
அவர்கள் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் யார் என்றோ, எத்தனை குழந்தைகள் இறந்தனர் என்பதையோ பொலிஸ்
 செய்தி தொடர்பாளர் தெரிவிக்காவிட்டாலும், அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள், அந்த வீட்டில் வசித்தவர்கள் அகதிகள் என்றும், பெரும்பாலும் எரித்ரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் 
தெரிவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 22 நவம்பர், 2018

கால்நடைகளின் கொம்புகளுக்காக ஒரு வித்தியாச வாக்கெடுப்பு சுவிசில்

சுவிட்சர்லாந்தில் கால்நடைகளின் கொம்புகள் தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வித்தியாச வாக்கெடுப்பு 
நடத்தப்பட உள்ளது.
Armin Capaul (67) என்னும் ஒரு தனி மனிதன் தொடங்கிய ஒரு போராட்டம், இன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆடு மாடுகளின் கொம்புகள் 700 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடான இரும்பு ஆயுதம் ஒன்றால் 
அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால் இதை எதிர்ப்பவர்கள், விலங்குகளின் கொம்புகள், அவற்றின் வளர்சிதை மாற்றம், சுகாதாரம் மற்றும் தங்களுக்குள் தகவல் தொடர்பு கொள்ளுதல் ஆகிய முக்கிய விடயங்களுக்கு உதவுகின்றன எனவே அவற்றை அகற்றக்கூடாது என்கின்றனர்.
இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு அது பட்ஜெட்டை பாதிக்கும் ஒரு விடயம், ஏனெனில் கொம்புள்ள கால்நடைகளை வைத்திருப்பதற்கு கொட்டகையில் அதிக இடம்
 வேண்டும்.
எனவே அவர்கள் கால்நடைகளின் கொம்புகள் அகற்றப்படக்கூடாது என்பதோடு, அவற்றை பராமரிப்பதற்காக உதவித் தொகையும் அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
கொம்புகளை அகற்றாத கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக விவசாய பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை
 விடுக்கின்றனர்.
ஆனால் அரசு இதை எதிர்க்கிறது; கொம்புள்ள கால்நடைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றார் விவசாயத் துறை அமைச்சர்.

இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஈழத் தமிழ் பெண் சுவிஸில் மாநகரசபை தேர்தலில் போட்டி

சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் 
செயற்பட்டு வருகின்றார்.
இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 15 நவம்பர், 2018

பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய சுவிஸ் விமானம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமான சுவிஸ் ஏர்பஸ் விமானம் ஒன்று நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
 ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து 103 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமாகியுள்ளது சுவிஸ்
 ஏர்பஸ் விமானம்.
சூரிச் விமான நிலையத்தின் 14-வது ஓடுதளம் நோக்கி விமானம் வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென்று ஆளில்லா விமானம் ஒன்று விமானியின் பார்வைக்கு 
தென்பட்டுள்ளது.
 சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக விமானத்தை திசை திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் விமான விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக சூரிச் விமான நிலைய அதிகாரிகள் சுவிஸ் விமான போக்குவரத்து அமைச்சகத்தை தொடர்பு கொண்டு 
தகவல் பகிர்ந்துள்ளது.
 குறித்த ஆளில்லா விமானத்தை இயக்கியவர் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை என கூறும் அதிகாரிகள், அது சட்டவிரோதமான செயற்பாடு எனவும், அனுமதி வழங்கப்படாத பகுதியில் ஆளில்லா விமானத்தை இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என 
தெரிவித்துள்ளனர்.
 இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 முறை இதுபோன்ற ஆளில்லா விமான சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 மேலும், 500 கிராம் எடை கொண்ட ஒரு ஆளில்லா
 விமானத்தால் பயணிகள் விமானம் ஒன்றை
 தகர்க்க முடியும் எனவும், எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு உண்டு எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து சுவிசில் கண்டுபிடிப்பு

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்' நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் 'டைப்' ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள்
 பிறக்கின்றன.
இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்' நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின் விலை 40 லட்சம் பிராங்குகள். ஆனால் சுவிட்சர்லாந்து அரசை
 பொறுத்தவரை எந்த வகை அரிய மருந்தாக இருந்தாலும் ஒரு லட்சம் பிராங்குகளாகவே இருக்க வேண்டும். எனவே இதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா? என்ற 
கேள்வி எழுந்துள்ளது


செவ்வாய், 13 நவம்பர், 2018

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுவிஸில் இலங்கை அரசியல் சூழலால் நிம்மதி

சுவிஸ் நாட்டில் அரசியல் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை விடும் சூழ்நிலையை இலங்கை அரசின் தற்போதைய சூழல் ஏற்ப்பாடு 
செய்து கொடுத்துள்ளது.
அண்மைய  காலங்களில் அகதிகள் தொடர்பான மிகவும் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கும் சுவிஸ் நாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான குடியேற்றவாசிகளின் நிலை தொடர்பில் சுவிஸ் நாடு சில தளர்ச்சிகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிய 
வருகின்றது.
இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைச் சபை. மற்றும் அமெரிக்கா பல உலக நாடுகள் மிகவும் கடுமையாக இலங்கை அதிபர் மைத்திரிபால ஸ்ரிசெனவுக்கு கடும் எச்சரிக்கை செய்ததுடன். லண்டன் தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம்
 என்று கூடஅறிவித்தது.
இந்நிலையில் சுவிஸ் அரசும் இலங்கை அதிபருக்கு சிலவிடயங்களை எடுத்துக் கூறியதுடன் தொடர்ந்தும் இலங்கையில் நிம்மதியற்ற சூழலும் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இலங்கையில் சூழ்நிலை உள்ளதால் சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோரியவர்களில் நிராகரிக்கப்பட்டவர்களது நாடுகடத்தல் விடயம் தொய்வு நிலையில் 
உள்ளதாக தெரிகின்றது.
ஐரோப்பிய இன்றியத்தின் பேச்சையும் கேட்காமல் சுவிஸ் அரசு ஆயிரக்கணக்கானோரை நாடுகடத்தியதுடன் பலரை டப்ளின் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டுள்ளதுடன் பலரை வெளியேற்றியும் வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்க அரசு கலைக்கப்பட்டு மனித உரிமைச் சபையால் யுத்தக் குற்றவாளி என கூறப்பட்ட இனப்படுகொலையாளி மகிந்தவை  ஜனாதிபதி சட்டவிரோதமாக பிரதம மந்திரியாக  பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதுடன் பாராளுமன்றை கால வரையறை  இன்றி ஒத்தி வைத்ததுடன் நல்லிணக்க அரசின் பாராளுமன்றைக் கலைத்து அறிக்கை
 வெளியிட்டார்.
இப்படியான இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையால் இலங்கை வாழுகின்ற தமிழர்களுக்கு மேலும் அச்சறுத்தல்கள் ஏற்ப்படலாம் என்னும் அடிப்படையில் சர்வதேசத்தின் அறிக்கைகளும் மனித உரிமைச் சபையின் அறிக்கைகளும் இலங்கையில் சுமுக நிலை இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளதால் சுவிஸ் அரசின் எல்லாத்தமிழ் அகதிகள் தொடர்பான விடயம் தற்காலிகமாக கிடப்பில் இருக்கக் கூடிய
 சூழ்நிலையே உள்ளதாக தெரிகிறது.
எனவே சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு சற்று நிம்மதியான சூழலே நிலவுகின்றது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 9 நவம்பர், 2018

சுவிசில வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உணவகம்

சுவிஸ் மெக்டொனால்ட் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்கள் பலர் தொலைக்காட்சியில் ஆபாச படம் ஒளிபரப்பானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். Schwyz பகுதியில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகம் ஒன்றில் சுமார் 30 பேர் உணவருந்திக்
 கொண்டிருந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து ஆபாச இணைய தளங்கள் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதோடு ஒரு ஆபாச சினிமாவும் காட்டப்பட்டது. உணவக ஊழியர்களிடம் ஒரு சில வாடிக்கையாளர்கள் இது குறித்து தெரிவித்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
பல வாடிக்கையாளர்கள் அசௌகரியமாக உணர்ந்ததால் அதை கவனிக்காதது போல திரும்பி உட்கார்ந்து கொண்டனர்.
சுவிஸ் மெக் டொனால்ட் உணவகத்தில் ஆபாச படம் காட்டப்பட்டது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு Solothurn பகுதியில் ஒரு உணவகத்தில் ஆபாச படம் காட்டப்பட்டதோடு, சர்வதேச ஊடகங்கள் அதை செய்தியாக்கியதால் உலகம் முழுவதும் அந்த 
சம்பவம் பேசப்பட்டது.
தடுப்பதற்காக மெக் டொனால்ட் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Eurosport உள்ளிட்ட சில குறிப்பிட்ட சேனல்களை மட்டுமே தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனென்றால் அவற்றில் எந்த ஆபாச காட்சிகளும் ஒளிபரப்பப்படுவதில்லை. இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மெக் டொனால்ட் செய்தி தொடர்பாளர் ஒருவர், மீண்டும் ஒரு முறை ஊழியர்களுக்கு விதிகள் குறித்து அறிவுறுத்தப்படும்
 என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பாரிய விபத்த்தில் சுவிஸில் ஆபத்தான நிலையில் யாழ். இளைஞன்

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதசாரிகள் நடப்பதற்கான மஞ்சள் கோட்டில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி
 படுகாயமடைந்துள்ளார்.
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தற்போது வசிக்கும் கவிஞர்பூவதி என்ற புனைப்பெயருடன் பூவதியின்புலம்பல்கள் எனும் கவிதை தொகுப்பினை வெளியிட்டு புகழ்பெற்ற கஜன் என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
நேற்று அதிகாலை இவர் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட வேளை பாரிய வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 3 நவம்பர், 2018

இளைஞர்களிடையே சுவிஸ்சில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்


சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள்.
சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுமுடிவுகள் 
வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் தினசரி அருந்திய மதுவின் அளவைவிடவும் தற்போது மிகவும் குறைவாக பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை சுவிஸில் மதுப்பழக்கம் தொடர்பான ஆய்வுகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் 20 சதவிகிதமாக இருந்த மது அருந்துவோர்களின் எண்ணிக்கை தற்போது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது
 என தெரியவந்துள்ளது.
இருப்பினும் சுவிஸ் மக்களில் 82 சதவிகிதம் பேர் தினசரி ஒரு கிண்ணமேனும் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 26 சதவிகிதம் பேர் தினசரி மது அருந்துவதாக
 குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் 1992 ஆம் ஆண்டு இது 29 விழுக்காடாக இருந்தது. மட்டுமின்றி 34 வயதுக்கு உட்பட்டவர்களின் மதுப்பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இளம் பெண்கள் மது அருந்துவதை வாடிக்கையாக
 வைத்துள்ளனர் எனவும்,
சில மணி நேரங்களில் பெண்கள் 4 கிண்ணம் வரையிலும், ஆண்கள் 5 கிண்ணம் வரையிலும் மது அருந்தும் அளவுக்கு அடிமையாக உள்ளதும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு 19 விழுக்காடாக இருந்த மது அருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 24 விழுக்காடாக
 அதிகரித்துள்ளது.



வாடகை கட்டணங்கள் சுவிட்சர்லாந்தில் அதிரடியாக சரிவு

சுவிட்சர்லாந்தில் வாடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது
 அரிய வாய்ப்பாக.
சுவிட்சர்லாந்தில் வடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சுவிஸில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாடகை கட்டணங்களில் சுமார் 0.5 சதவிகிதம் அளவுக்கு அதிரடியாக
 குறைக்கப்பட்டது.
இதே நிலை அக்டோபர் மாதத்திலும் நீடித்த நிலையில், இதுவரை நான்கு முறை வாடகை கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளதும் சாதாரண பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பாக
 பார்க்கப்படுகிறது.
100 சதுர மீற்றர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு தற்போது மாத வாடகையாக சுமார் 2165 பிராங்குகள் வசூலிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க டிசினோ மாகாணத்தில் வாடகை கட்டணங்கள் 1.1 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.
சூரிச் மாகாணத்தில் 100 சதுர மீற்றர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு மாத வாடகையாக 2,610 பிராங்குகள் கட்டணமாக 
வசூலிக்கப்பட்டுகிறது
ஆனால் டிசினோ மாகாணத்தில் இதே குடியிருப்புக்கு 1894 பிராங்குகள் வாடகை கட்டணம் என கூறப்படுகிறது.
ஜெனிவா பகுதியிலும் வடமேற்கு சுவிட்சர்லாந்திலும் வாடகை கட்டணம் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.