வியாழன், 22 நவம்பர், 2018

கால்நடைகளின் கொம்புகளுக்காக ஒரு வித்தியாச வாக்கெடுப்பு சுவிசில்

சுவிட்சர்லாந்தில் கால்நடைகளின் கொம்புகள் தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வித்தியாச வாக்கெடுப்பு 
நடத்தப்பட உள்ளது.
Armin Capaul (67) என்னும் ஒரு தனி மனிதன் தொடங்கிய ஒரு போராட்டம், இன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆடு மாடுகளின் கொம்புகள் 700 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடான இரும்பு ஆயுதம் ஒன்றால் 
அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால் இதை எதிர்ப்பவர்கள், விலங்குகளின் கொம்புகள், அவற்றின் வளர்சிதை மாற்றம், சுகாதாரம் மற்றும் தங்களுக்குள் தகவல் தொடர்பு கொள்ளுதல் ஆகிய முக்கிய விடயங்களுக்கு உதவுகின்றன எனவே அவற்றை அகற்றக்கூடாது என்கின்றனர்.
இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு அது பட்ஜெட்டை பாதிக்கும் ஒரு விடயம், ஏனெனில் கொம்புள்ள கால்நடைகளை வைத்திருப்பதற்கு கொட்டகையில் அதிக இடம்
 வேண்டும்.
எனவே அவர்கள் கால்நடைகளின் கொம்புகள் அகற்றப்படக்கூடாது என்பதோடு, அவற்றை பராமரிப்பதற்காக உதவித் தொகையும் அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
கொம்புகளை அகற்றாத கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக விவசாய பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை
 விடுக்கின்றனர்.
ஆனால் அரசு இதை எதிர்க்கிறது; கொம்புள்ள கால்நடைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றார் விவசாயத் துறை அமைச்சர்.

இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.