வியாழன், 17 ஜனவரி, 2019

ஈழத்தமிழ் பெண் சுவிட்ஸர்லாந்தில் வாகன விபத்தில் மரணம்

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர்
 அகாலமரணம் 
தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச்Regensdorf தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16.01.2019 பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் நல்லடக்க திகதி பின்பு அறியத்தரப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்போம்
தகவல்: குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 4 ஜனவரி, 2019

இனி சுவிஸ்சில் டார்ஜிலிங் மலை ரயில் வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மலை ரயில் நிலையம் ஒன்று மூன்றாவது முறையாக மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Junfraujoch ரயில்பாதை 1912ஆம் ஆண்டு போடப்பட்டது.
அந்த பாதை போடப்பட்ட முதலாண்டிலேயே 42,000 சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான ரயில் நிலையமான Jungfraujoch ரயில் நிலையத்திற்கு 1,067,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.
பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டிற்காகவே சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம் என்பதால், இம்முறை பனி குறைவாக இருந்ததால் பிரச்சினை இருக்கும் என்பதற்காக செயற்கையாக பனி உருவாக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டது.
பனி குறைவாக இருந்ததால் கடந்த ஆண்டு பனிச்சறுக்கு விளையாடுவதற்காக மட்டும் மலை ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.9 சதவிகிதம் குறைந்தது.
ஆனாலும் ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ரயில் போக்குவரத்தை விரும்பியதையடுத்து 2017ஆம் ஆண்டு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 
2.4 சதவிகிதம் உயர்ந்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 2 ஜனவரி, 2019

ஜனவரி மாதம்.2019. முதல் சுவிஸில் புதிய சட்டம் நடைமுறை

சுவிஸர்லாந்தில் புதிய ஆண்டு முதல் போக்குவரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
சமஷ்டி பேரவை நிறைவேற்றிய வாகன போக்குவரத்து திருத்தச் சட்டங்கள் ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 
அமுலுக்கு வரவுள்ளன.
இதனடிப்படையில், மருத்துவப் பரிசோதனை, அடிப்படையான சாரதி பயிற்சி மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லல் தொடர்பில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் புதிய சாரதிகள் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்ட முடியும் என்பதே முக்கியமான மாற்றம். ( Automaten-Fahrer dürfen ab Februar schalten)
சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த வரையறையும் உள்ளடக்கப்பட மாட்டாது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், போக்குவரத்து வரம்புகளை நீக்குவது தொடர்பில் வீதி போக்குவரத்து அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
போக்குவரத்து மருத்துவ சோதனை
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி மருத்துவ சோதனைக்கான வயது வரம்பு அமலுக்கு வரும். 75 வயதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை, இந்த கடமை ஏற்கனவே 70 ஆண்டுகள் இருந்தன.
இதேவேளை, சமஷ்டி புள்ளவிபர அலுவலகத்திற்கு அமைய, சூரிச் பிராந்தியத்தில் 2017 ஆம் ஆண்டு தானியங்கி மற்றும் கைமுறையான எரிசக்தி நிரப்பும் மையங்கள் இருந்தன. புதிய போக்குவரத்து நடைமுறைகள் தானியங்கி மின்சார வாகனங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.