ஞாயிறு, 24 மே, 2015

அதிபரை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி சுவிஸ்சில் கைது

ஜேர்மனி நாட்டின் முன்னாள் அதிபரை கொலை செய்ய திட்டம் வகுத்த ஈராக் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் மண்டலங்களில் ஒன்றான Schauffhausen-ல் உள்ள Beringen நகரில் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம், சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான நபரை சுவிஸ் பொலிசார் கைது செய்தனர்.
சுவிஸ் மற்றும் ஜேர்மனியில் வெடிகுண்டுகள், நச்சு வாயுக்களை பரப்பி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த நபரை விசாரணை வட்டத்தில் சுவிஸ் பொலிசார் வைத்திருந்தனர்.
இந்நிலையில், விசாரணையின்போது ‘தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பிரபலமான முக்கிய நபர்’ என அந்த நபரே கூறிவந்ததால் அவர் மீது பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியதுடன் அவரது சிறை காவலையும் அதிகரித்தனர்.
தற்போது சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதியின் முந்தைய ‘கைப்பேசி உரையாடல்களை’ கைப்பற்றி உள்ளதாகவும் அதில் பல அதிர்ச்சி தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த தீவிரவாதி சுவிஸில் ஐ.எஸ் இயக்கத்தின் தனி பிரிவு ஒன்றை தொடங்க இருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜேர்மனியின் Berliner Morgenpost என்ற பத்திரிகை பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி, ஜேர்மனியின் முன்னாள் அதிபரான Joachim Gauck, சுவிஸில் உள்ள ஜெனிவா நகருக்கு கடந்த 2014ம் ஆண்டு வருகை தந்தபோது, அவரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஜேர்மனியி உள்ள அதிபருடைய Bellevue என்ற அரசு மாளிகை மீதும் தாக்குதல் நடத்த அந்த தீவிரவாதி திட்டம் வகுத்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்தி குறித்து பேசிய சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிரவாதியிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.