வெள்ளி, 29 ஜனவரி, 2016

புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அரசுஅறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் பணி நிமித்தமாகவும் புகலிடத்திற்காகவும் வருகை தரும் வெளிநாட்டினர்கள் குறித்து சுவிஸ் குடியமர்வு செயலக அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பணி மற்றும் பிற விடயங்களுக்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ம் ஆண்டில் 9.4 சதவிகிதம் குறைந்து, 71,500 என்ற எண்ணிக்கையில் பின்னடைவை 
சந்தித்துள்ளது.
2015ம் ஆண்டில் மட்டும் சுவிஸ் நாட்டிற்கு 1,50,459 நபர்கள் வருகை தந்துள்ளனர். அதேசமயம், 73,444 நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 2015ம் ஆண்டு இறுதி வரை சுவிட்சர்லாந்தில் 19,93,916 வெளிநாட்டு நபர்கள் வசித்துள்ளனர்.
சுவிஸிற்கு வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், சுவிஸில் புகலிடம் கோரி விண்ணப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதாவது, 2015ம் ஆண்டு சுவிஸில் புகலிடம் கோரியவர்கள் 66 சதவிகிதம் அதிகரித்து 39,523 என்ற எண்ணிக்கையை 
அடைந்துள்ளது.
இவர்களில் எரித்திரியா நாட்டை சேர்ந்த 9,966 நபர்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 7,831 நபர்களும் சிரியாவை சேர்ந்த 4,745 நபர்களும் இருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 28 ஜனவரி, 2016

நகைகளை திருடிய நபர்களுக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை !!!

சுவிட்சர்லாந்து நாட்டு ஆபரண நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 5 லட்சம் யூரோ மதிப்பிலான நகைகளை திருடிய 3 நபர்களுக்கு 14 வருடங்கள் வரை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கென்னஸ் திரைப்பட விழாவில் உலகப்புகழ் பெற்ற சுவிஸ் நாட்டை சேர்ந்த Chopard என்ற ஆபரண நிறுவனம் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், அல்ஜீரியா நாட்டை சேர்ந்த Djelloul Mezzouar(44), அதே நாட்டை சேர்ந்த Mohamed Marref(46) மற்றும் Samir Guerroum(38) ஆகிய நபர்கள் கூட்டாக திட்டமிட்டு திரைப்பட விழா நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஹொட்டல் அறையில் தங்கியுள்ளனர்.
இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அணியும் விலை உயர்ந்த ஆபரணங்களை சுவிட்சர்லாந்தை சேர்ந்த Chopard வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளது.
இதனை முன்கூட்டிய தெரிந்துக்கொண்ட திருடர்கள் இருவரும் நூதனமாக திட்டமிட்டு 5,36,000 யூரோ மதிப்புள்ள அந்த நகைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
திருடிய நகைகளை அல்ஜீரியா நாட்டை சேர்ந்த Farida Saddouki என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்துள்ளனர்.
திருட்டு குறித்து தகவல் அறிந்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று பிரான்ஸ் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
இந்த திருட்டு குற்றத்தில் முதல் குற்றவாளியான Mohamed Marrefநீதிமன்றத்திற்கு வராமலேயே அவருக்கு நீதிபதி 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளார்.
இதற்கு அடுத்த குற்றவாளிகளான Djelloul Mezzouar என்பவருக்கு 10 வருடங்களும், Samir Guerroum என்பவருக்கு 7 வருடங்களும் நீதிபதி சிறை தண்டனை விதித்துள்ளார்.
மேலும், திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக Farida Saddouki என்ற அந்த பெண்ணிற்கும் நீதிபதி 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>சனி, 23 ஜனவரி, 2016

இலங்கைப் பிரதமர் சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தர் ?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அம்மேனை (Schneider Ammann) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு டவோஸ் நகரில் உள்ள சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இன்று இடம்பெற்றுள்ளது. 
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
2016ம் ஆண்டுக்கான உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 19ம் திகதி சுவிட்ஸர்லாந்துக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 5 ஜனவரி, 2016

சுவிக்கு சிகிச்சை பெற வந்த மன்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டது !

கத்தார் நாட்டின் முன் நாள் மன்னரான ஆமீரானா, தனது பரிவாரங்களோடு சுவிஸ் நாட்டுக்குள் 9 விமானங்களில் சென்றுள்ளார். இவர் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுலா சென்றவேளை அங்கே காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு செல்ல , உடனடியாக அனுமதி கோரப்பட்டது. இரவு 
நேரங்களில்
சூரிச் நகர் மீது விமானங்கள் பறக்க தடை உள்ளது. இன் நிலையில் அவசர சிகிச்சைக்காக ஒரு விமானத்தில் அவர் வருவார் என்று எதிர் பார்த்தால் , ஒன்றன் பின் ஒன்றாக 9 விமானங்கள் சுவிஸ் சூரிச் நகரை
 நெருங்கியுள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளார்கள். 
அதுபோக அத்தனை விமானங்களையும் இறக்க ஏதுவான , வசதிகள் கூட செய்யப்படாத நிலையில் , இந்த 9 விமானங்களும் தரையிறங்க 
முற்பட்டுள்ளது.
முதலில் 3 விமானத்தையே அதிகாரிகள் தரையிறங்க அனுமதித்துள்ளார்கள். சூரிச் நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் முன் நாள் மன்னர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இரவு நேரத்தில் 
விமனாத்தை கொண்டுவந்து பெரும் இரைச்சலை ஏற்படுத்தியது. மற்றும் விமான நிலைய 
அதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்று காரணங்களைக் காட்டி , 13,000 பிராங்குகளை அபராதமாக விதித்துள்ளார்கள், சுவிஸ் அதிகாரிகள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 2 ஜனவரி, 2016

புதிய ஆண்டில் இருந்து சுவிஸ்சில்புதிய சட்டம் அமுல்???

 2016, ஜனவரி புத்தாண்டான 1-ம் திகதி முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு புதிய சட்டங்களை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்கனவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன் முதற்கட்டமாக 3 முக்கிய புதிய சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ரயில், பேருந்துகளில் பயணச்சீட்டு அவசியம்
சுவிஸ் அரசின் பொது போக்குவரத்துகளான ரயில் மற்றும் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 1ம் திகதி முதல் ரயில் மற்றும் பேருந்துகளில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை தேசிய தகவல் மையத்தில் பாதுகாக்கப்படும்.
இந்த தகவல்களை போக்குவரத்து நிறுவனங்கள் எளிதில் பெற்றுக்கொள்வதுடன், பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் புதிய சட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டில் தொலைபேசி மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே அனுப்புவைக்கும் நடைமுறை அதிகமாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
மேலும், திருப்தி இல்லாத பொருட்களை நிறுவனத்திற்கே திருப்பி அளிப்பதற்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இதில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் திகதி முதல் தொலைபேசி மூலமாக 100 பிராங்க் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்து, அதில் திருப்தி இல்லை என்றால், அதனை நிறுவனத்திற்கு திருப்பி அளிக்கும் கால அவகாசத்தை 2 வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், இணையதளம் மூலமாக பொருட்களை வாங்குபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
மேலும், சிறிய அளவிலான கடனை பெறுவதற்கு அதிகப்படியான மற்றும் மிதமிஞ்சிய விளம்பரங்கள் செய்து பொதுமக்கள் மீது கடன் சுமை ஏற்றும் நடவடிக்கைக்கும் தற்போது முற்றுப்புள்ளி 
வைக்கப்பட்டுள்ளது.
பணமோசடியை தடுக்கும் நோக்கில், 1,00,000 பிராங்க் தொகைக்கு மேல் பணபரிவர்த்தனையை மேற்கொண்டால், அதற்கு கூடுதலான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தம் வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு
சுவிஸ் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் வெளியிடும் கார்பன் –டை –ஆக்ஸைடு வாயுவால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது.
எதிர்வரும் 2020ம் ஆண்டிற்குள் இவ்வாறான வாயுக்களை 
வெளியிடுவதை கடுமையாக குறைக்கப்படும் என சுவிஸ் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் முதல் கட்டமாக, ஒரு டன் அளவிற்கு மிதமிஞ்சிய கார்பன் – டை –ஆக்ஸைடு வாயுவை வெளியிடும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை தற்போது 60 பிராங்கில் இருந்து 86 பிராங்காக அரசு உயர்த்தியுள்ளது.
இதன் மூலம், சுவிஸில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதுகாக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.