புதன், 17 ஆகஸ்ட், 2016

ரூபாய்.2.34 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிய பெண்!

  சுவிட்சர்லாந்து நாட்டில்  ரூபாய் 2.34 கோடி  மதிப்புள்ள நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிஸில் உள்ள லூசேர்ன் மாகாணத்தில் பெண்களை வீடு வீடாக அனுப்பி சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் Obwalden மாகாணத்தை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
நிறுவனம் அனுப்பும் வீடுகளுக்கு சென்று சுத்தம் செய்யும் பணியை இவர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2011ம் ஆண்டு முதல் மார்ச் 2012ம் ஆண்டு வரை இந்த வேலைக்காரப் பெண் 5 வீடுகளில் திருடியுள்ளார்.
இவ்வாறு இவர் திருடிய நகைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 1,56,000 பிராங்க்(2,34,41,163 இலங்கை ரூபாய்) ஆகும்.
பெயர் வெளியிடப்படாத இப்பெண் மீது திருட்டு குற்றம் அம்பலமானதை தொடர்ந்து அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பெண் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, 5 வீடுகளில் நகைகளை திருடியது நிரூபனம் ஆனதை தொடர்ந்து பெண்ணிற்கு நீதிமன்றம் 20 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இவ்வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு ஆன 8,500 பிராங்க் செலவினத்தையும் அப்பெண் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

ஒரு உணவகம்:பரந்த வெளியில்சுவர்கள் இல்லை, கூரையும் இல்லை!

சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவனம் ஒன்று கூரை எதுவும் இல்லாத பரந்த வெளியில் உணவம் ஒன்றை அமைத்து அசத்தி வருகின்றது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகாமையில் பிரபல ஹொட்டல் ஒன்று Zero Star உணவகம் என்ற பெயரில் இந்த நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உணவகத்தின் சிறப்பு என்னவெனில் இங்கு சுவர்கள் இல்லை மட்டுமின்றி கூரையும் இல்லை. திறந்த வெளியில் இயற்கையை அனுபவித்தபடி உணவு அருந்தலாம், தூங்கி 
ஓய்வெடுக்கலாம்.
ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட இந்த சிறப்பு சேவையானது கடல் மட்டத்தில் இருந்து 6,463 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு நாள் இரவு இந்த சிறப்பினை அனுபவிக்க சுமார் 15,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை Frank மற்றும் Patrik ஆகிய இரு கலைஞர்கள் தங்களுக்கு அறிமுகமான விருந்தோம்பல் நிபுணர் ஒருவருடன் இணைந்து செயல்படுத்தியுள்ளனர்.
இங்கு வந்து தங்குபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உணவுகளை சமைத்து வழங்க ஒரு சமையல்கலைஞரையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதிக குளிர் நாட்களில் இங்கு விருந்தினர்களை அனுமதிப்பதில்லையாம். மட்டுமின்றி பனிப்பொழிவு காலங்களிலும் ஹொட்டல் மூடப்படுமாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வாலிபரை கத்தியால் தாக்கி கொள்ளையிட்ட மர்ம நபர்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கழிவறைக்கு சென்ற வாலிபரை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையடித்த இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
பேசல் மாகாணத்தின் Freiburgerstrasse என்ற பகுதியில் உள்ள கழிவறைக்கு 19 வயதான வாலிபர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது, அறையின் வாயிலில் நின்று இருவர் திடீரென வாலிபர் மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், இருவரில் ஒருவன் கத்தியை எடுத்து வாலிபரின் இடுப்பு பகுதியில் குத்திவிட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் 18 வயதான வாலிபர் ஒருவர் இருவரிடம் குறிப்பிட்ட முகவரி ஒன்றை கேட்டுள்ளார்.
முகவரியை தெரிவிப்பதாக கூறிய இருவர் வாலிபரை அழைத்துச் சென்றுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு இருவரில் ஒருவன் வாலிபரை மடக்கி பிடித்துக்கொள்ள மற்றொருவன் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வாலிபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இரு சம்பவங்கள் தொடர்பாக ஆதாரங்கள் சேகரித்துள்ள பொலிசார் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை தீவிரமாக தேடி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 4 ஆகஸ்ட், 2016

குடியுரிமைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி?

எதிர்வரும் 2018 ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
தற்போது சுவிஸில் 12 ஆண்டுகளாக குடியிருக்கும் வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், 2018ல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் மூலம் சுவிஸில் 10 ஆண்டுகளாக குடியிருப்பவர்களும் குடியுரிமை பெற முடியும்.
எனினும், இவர்கள் C permit எனப்படும் நிரந்தர குடியிருப்பு அனுமதியை பெற்றிருப்பது அவசியமாகும்.
தற்போது, B permit எனப்படும் தற்காலிக குடியிருப்பு பெற்றவர்களும் குடியுரிமை கோரி விண்ணிப்பிக்கலாம்
ஆனால், 2018ம் ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் B permit வைத்துள்ள சுமார் 6,50,000 வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உரிமை பறிக்கப்படும்.
இதுபோன்ற ஒரு சூழலில், சுவிஸில் உள்ள Socialist Party(SP) கட்சி ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் திகதி சுவிஸில் தேசிய திணம் கொண்டாடப்பட்டபோது எஸ்.பி கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், சுவிஸ் குடியுரிமைக்கு காத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவ தானாக முன்வந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே சுவிஸில் தான் குடியுரிமை பெறுவதற்கு என்ணற்ற தடைகள் உள்ளன. இதைவிட, 2018ம் ஆண்டின் புதிய சட்டம் கூடுதலான சிரமங்களை உருவாக்கும்.
எனவே, B permit வைத்துள்ள ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் கடிதம் அனுப்ப எஸ்.பி கட்சி முடிவு செய்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு மாகாண அரசுடன் இணைந்து அங்குள்ள B permit வைத்துள்ள வெளிநாட்டினர்கள் எப்படி குடியுரிமை பெறுவது? என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும்? என்னென்ன உதவிகள் தேவை? என்பதை அறிந்து எஸ்.பி கட்சி உதவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டை பொருத்தவரை அனைத்து தகுதிகளும் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்களிடம் ஒருங்கிணைந்து பழகாத வெளிநாட்டினர் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாகும்.
உதராணமாக, சுவிஸில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் சுவிஸ் குடிமக்களிடம் சரியாக கலந்து பழகாத காரணத்திற்காக அவருக்கு 2014ம் ஆண்டு குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 3 ஆகஸ்ட், 2016

சுவிஸ் விமானங்கள்அதிக விபத்துக்குள்ளாகின்றது !

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2015 ஆம் ஆண்டும் மட்டும் சுவிஸ் பதிவு விமானங்கள் அதிக விபத்துகளில் சிக்கியுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 75 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பட்டியலிட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இந்த புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக 71 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் 2004 ஆம் ஆண்டு இது 73 எனவும் 
பதிவாகியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சுவிஸில் பதிவு செய்யப்பட்ட விமானங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக கடந்த 2012 ஆம் ஆண்டு 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சுவிஸ் பொது விமானச் சேவையின் பல்வேறு பிரிவுகளில் அதிரடியான மாற்றங்கள் கடந்த 2015-ல் இருந்தே துவங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டுக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது குட்டி ரக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் உள்ளிட்டவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்பட்டு வரும் நிலையில், ட்ரோன் உள்ளிட்ட குட்டி விமானங்களால் அதிக விபத்து ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

எதற்காக தெரியுமா ஜெனிவா ஏரியை கடந்து சாதனை படைத்த ஸ்பெயின் நபர்?

ஸ்பெயினை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
Jaime Caballero எனபவர் ஸ்பெயின் நீச்சல் வீரர். இவர் பிரித்தானியாவின் Gibraltar கடல் பகுதி மற்றும் Ibiza தீவு பகுதியை நீச்சலடித்து கடந்து சாதனை படைத்தவர்.
இந்நிலையில் இவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் கடந்து 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த ஞாயிறு மாலை 3 மணியளவில் இந்த சாதனை பயணத்தை Villeneuve என்ற இடத்தில் ஏரியின் கிழக்கு பகுதியில் இருந்து தொடங்கி வெற்றிகரமாக முடித்தார்.
இந்த சாதனை பயணத்தின் போது ஒரு படகு, மருத்துவர்கள் அவர் கூடவே பாதுகாப்புக்காக சென்றனர். வழியில் அவருக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் இந்த சாதனை பயணத்தை நீரழிவு நோய் விழிப்புணர்வுக்காகவும், ஜெனிவாவின் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை திரட்டவும் மேற்கொண்டுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு ஜெனிவா நகர மேயர் Guillaume Barazzone பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து Jaime Caballero கூறுகையில், நான் நன்றாகவே முயற்சி செய்தேன். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நீச்சலடிப்பது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் கடினமானது.
இந்த சாதனை பயணத்தின் போது மழையாலும், உயர்ந்த அலையாலும் அவதிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>Blogger இயக்குவது.