புதன், 3 ஆகஸ்ட், 2016

எதற்காக தெரியுமா ஜெனிவா ஏரியை கடந்து சாதனை படைத்த ஸ்பெயின் நபர்?

ஸ்பெயினை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
Jaime Caballero எனபவர் ஸ்பெயின் நீச்சல் வீரர். இவர் பிரித்தானியாவின் Gibraltar கடல் பகுதி மற்றும் Ibiza தீவு பகுதியை நீச்சலடித்து கடந்து சாதனை படைத்தவர்.
இந்நிலையில் இவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் கடந்து 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த ஞாயிறு மாலை 3 மணியளவில் இந்த சாதனை பயணத்தை Villeneuve என்ற இடத்தில் ஏரியின் கிழக்கு பகுதியில் இருந்து தொடங்கி வெற்றிகரமாக முடித்தார்.
இந்த சாதனை பயணத்தின் போது ஒரு படகு, மருத்துவர்கள் அவர் கூடவே பாதுகாப்புக்காக சென்றனர். வழியில் அவருக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் இந்த சாதனை பயணத்தை நீரழிவு நோய் விழிப்புணர்வுக்காகவும், ஜெனிவாவின் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை திரட்டவும் மேற்கொண்டுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு ஜெனிவா நகர மேயர் Guillaume Barazzone பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து Jaime Caballero கூறுகையில், நான் நன்றாகவே முயற்சி செய்தேன். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நீச்சலடிப்பது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் கடினமானது.
இந்த சாதனை பயணத்தின் போது மழையாலும், உயர்ந்த அலையாலும் அவதிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.