செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

வாலிபரை கத்தியால் தாக்கி கொள்ளையிட்ட மர்ம நபர்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கழிவறைக்கு சென்ற வாலிபரை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையடித்த இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
பேசல் மாகாணத்தின் Freiburgerstrasse என்ற பகுதியில் உள்ள கழிவறைக்கு 19 வயதான வாலிபர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது, அறையின் வாயிலில் நின்று இருவர் திடீரென வாலிபர் மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், இருவரில் ஒருவன் கத்தியை எடுத்து வாலிபரின் இடுப்பு பகுதியில் குத்திவிட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் 18 வயதான வாலிபர் ஒருவர் இருவரிடம் குறிப்பிட்ட முகவரி ஒன்றை கேட்டுள்ளார்.
முகவரியை தெரிவிப்பதாக கூறிய இருவர் வாலிபரை அழைத்துச் சென்றுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு இருவரில் ஒருவன் வாலிபரை மடக்கி பிடித்துக்கொள்ள மற்றொருவன் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வாலிபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இரு சம்பவங்கள் தொடர்பாக ஆதாரங்கள் சேகரித்துள்ள பொலிசார் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை தீவிரமாக தேடி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.