வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன்!!


4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன் சுவிஸில் உலக சாதனைக்காக 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பாட்ரிக் கெர்பர் சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்தவர் பெட்ரிக் கெர்பர். 32 வயதான இவர் சிறுவயதிலேயே 820 மீற்றர் உயரத்திலிருந்து 2 நிமிடங்கள் 3 வினாடிகளிலிருந்து பறந்து சாதனை படைத்துள்ளார். தற்போது ஆல்ப்ஸ் மலையிலிருந்து 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்துள்ளார். இது குறித்து கெர்பர் கூறுகையில், இது என்னுடைய நீண்ட நாள் ஆசையாகும். மேலும் நான் பறப்பதற்கு முன்னதாக பனி மற்றும் காற்று நிலை குறித்து அறிந்து கொண்டேன். அதன் பின்பு பறக்கத்தொடங்கினேன். நான் கீழே இறங்கிய பின்பு என்னுடைய பாரசூட்டானது விரிந்து கொண்டது. இந்த சாதனையை எப்படி செய்தேன் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆல்ப்ஸ் மலையில் சாதனையில் ஈடுபட்ட 30 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், சமீபத்தில் சண்டைப் பயிற்சியாளரான மார்க் சட்டன் சாகசத்தில் ஈடுபடும்போது மலைப்பகுதியில் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது {காணொளி இணைப்பு)

புதன், 28 ஆகஸ்ட், 2013

காப்பீட்டு நிறுவன தலைமை அதிகாரி மரணம்: பொலிசார் விசாரணை


சுவிஸின் காப்புறுதி தலைமை நிதி அதிகாரி பியர் வாதியர் (Pierre Wauthier) தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சூரிச் காப்பீட்டு நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த பியர் வாதியர் (Pierre Wauthier) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
1960ம் ஆண்டு பிறந்த வாதியர் 1982ம் ஆண்டு முதல் KPGM நிறுவனத்தின் மூலம் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்பு பிரான்சில் வெளியுறவு அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு சூரிச் காப்பீட்டு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இவர் 2011ம் ஆண்டு தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தற்போது இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளிவராத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவிஸில் கடந்த மாதம் சுவிஸ்காம் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் இதேபோன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எரித்துக் கொன்ற தந்தை இரண்டு மகள்களை!!!


சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு குழந்தைகள் காருக்குள் எரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் தந்தை சிறிது கிலோ மீட்டர் இடைவெளியில் ஆபத்தான நிலையில் எரிந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், இவர் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் தனது குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டதாக இவரது மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், இவரே தனது குழந்தைகளை வைத்து காரினை எரித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

காரை ஏலத்தில் 27.5 மில்லியன் டொலருக்கு எடுத்த சுவிட்சர்லாந்து


உலகில் இதுவரை ஏலம் விடப்பட்ட கார்களில் அதிகபட்ச விலைக்கு போனது சிவப்பு நிற பெரராரி கன்வெர்டிபிள் கார்தான்.
27.5 மில்லியன் டொலருக்கு கடந்த வாரஇறுதியில் அமெரிக்காவில் ஏலம் போன இந்தக்காரை சுவிஸ்ஸைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.
இந்த கார் 300 குதிரைத்திறன் கொண்ட NART Spider வகை விளையாட்டுக்கார் ஆகும்.
கடந்த 1967ம் உற்பத்தி செய்யப்பட்ட இந்தக்காரை அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எடி ஸ்மித் 1968ம் ஆண்டு வெளியான Thomas Crown Affair ஹாலிவுட் படத்தில் இதே மொடல் காரை நாயகன் ஓட்டியதைப்பார்த்து ஆசையில் வாங்கினாராம்.
இந்தக்காரைக் பயன்படுத்திய எடி கடந்த 2007ம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடந்து, இந்தக்கார் விமானநிலையத்தில் உயர்ரக வசதியுடன் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்தக் காரை பிரபல RM ஏல நிறுவனம் தற்போது ஏலத்தில் விட்டது. இந்தக் கார் தற்போது எங்குள்ளது என்பது தெரியவில்லை. விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு இந்தக்கார் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த


சுவிட்சர்லாந்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை சுட்டு விட்டு, தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் நகரில் உள்ள பொம்மை விற்கும் கடையின் கார்நிறுத்தப் பகுதியில் இச்சம்பவமானது நடைபெற்றுள்ளது.
சம்பவதினத்தன்று தம்பதிகள், தனது மூன்று வயது குழந்தையுடன் பொம்மை கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அக்கடையின் கார் நிறுத்தும் இடமான சுரங்கப்பாதையில் வைத்து தன்னுடைய மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார், பின்பு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிழந்துள்ளார்.
இதில் அப்பெண் மட்டும் பலத்த குண்டடிபட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த மகள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 

புதன், 21 ஆகஸ்ட், 2013

தலைமை நிர்வாக சுவிஸ்காமின் அதிகாரி மரண அறிக்கை !!!


சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான சுவிஸ்காமின்(Swisscom) தலைமை நிர்வாக அதிகாரியின் தற்கொலை குறித்து இணையதளம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள சுவிஸ்காம்(Swisscom) நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஸ்கோல்டர்(Schloter)(49). இவர் கடந்த யூலை மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இவரது மரணமானது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஸ்கோல்டர் தனது குடும்ப வாழ்க்கை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டு தனியாக வாழ்ந்துவந்தார். இதனைத் தொடர்ந்து தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணுடன் காதல் கொண்டார்.
பின்பு இந்த வாழ்க்கையும் கசந்த பிறகு வாழ்க்கையில் வெறுத்துப்போன இவர் தான் நிஜ வாழ்க்கையில் தோற்றுவிட்டதாகவும், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் வாழ்க்கையில் நிறைய தவறுகள் செய்திருக்கலாம் அவை அனைத்தும் தவறு என்று உணர்ந்துகொண்டேன் என்று கடிதத்தில் எழுதியுள்ளார். இவருடைய கடிதத்தினை அந்நாட்டு இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் இவர் ஒரு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி என்று சுவிஸ்காம் புகழாரம் சூடியுள்ளது எமதுஇந்தஇணயத்த்தின்ஆழ்ந்தஅனுதாபத்தைத்தினைதெரிவிக்கின்றோம்
 

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு களம் இறங்கிய குரங்குகள்(


சுவிஸ் நாட்டில் மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு சிம்பன்சி மற்றும் உரங்கொட்டான் குரங்குகளுக்கு பயிற்சி கொடுத்து இரு ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக குரங்கு இனமானது மிருகக்காட்சி சாலைகளில் மனிதர்களின் பார்வைக்காக அடைத்து வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த வகை இனமும் மனிதர்களுக்கு இணையாக நீச்சல் பயிற்சியில் சிந்தித்து செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெர்ன் பல்கழைக்கழகத்தின் பரிணாமம் மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் நிக்கோல் பெண்டர்(Nicole Bender) கூறுகையில், குரங்குகளுக்கு முதலில் இரண்டு மீட்டர் ஆழமான பகுதியில் கயிறு கட்டி நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு பின்பு அவர்கள் தானகவே மேற்பரப்பில் நீந்த தொடங்கிவிட்டனர். தற்போது நீச்சல் மற்றும் டைவ் அடிப்பது போன்ற செயல்களில் மும்முரமாக சிம்பன்சி மற்றும் மனிதகுரங்கு ஈடுபட்டு வருகின்றன.
மேலும் குரங்குகள் நீச்சல் மற்றும் டைவ்விங் அடிப்பது குறித்து ஏற்கனவே குறிப்புகள் எடுக்கப்பட்ட போதும் அவை படமாக வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்காவின் மானிடவியல் ஆராய்ச்சி பதிப்பானது இந்த ஆராய்ச்சியினை படமாக வெளியிட்டுள்ளது என நிக்கோல் பெண்டர் தெரிவித்துள்ளார்.
{வீடியோ இணைப்பு) }

சனி, 17 ஆகஸ்ட், 2013

சுவிட்சர்லாந்தில் செக்ஸ் பாக்ஸ் அறிமுகம்


சுவிட்சர்லாந்தில் விலைமாதர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சிகால் ஆற்றின் கரையில் சுற்றுலாவாசிகள் அதிகம் கூடும் இடங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார்கள் எழுந்தது.
இதனால் சுற்றுலாதளம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்ததால், இதனை தடுக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது சூரிச் நகரின் மேற்கு புறத்தில் மரத்தினாலான பாதுகாப்புடன் கூடிய அறையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கார்களில் வரும் ஓட்டுனர்களின் வசதிக்காக மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள், அங்கு தயாராக இருக்கும் 40 விலை மாதர்களில் விரும்பிய ஒருவரை தெரிவு செய்யலாம்.
அதன் பின் கட்டணம் குறித்து பேசி முடிவு செய்த பின்னர், அவருடன் வாடிக்கையாளர் இந்த செக்ஸ் பாக்சுக்குள் செல்லலாம்.
இந்த அறையின் வாசலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உட்பட பல வாசகங்கள் தொங்க விடப்பட்டிருக்கும்.
விலைமாதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாக்ஸ், வருகிற 26ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என நகர நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாலை வேளையில் தொடங்கும் இந்த அறையின் சேவை மறுநாள் காலை 5 மணியுடன் முடிவடையும் என்றும், பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுவிஸில் விபச்சாரம் நடத்தும் சீன நாட்டு பெண்மணி


சுவிட்சர்லாந்தில் 56 வயது சீன பெண் ஒருவர் விபச்சார தொழில் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள புறநகர் பகுதியான லேன்சி என்னும் இடத்தில் 56 வயது சீன பெண் ஒருவர் மசாஜ் நிலையம் நடத்தி வந்துள்ளார்.
அங்கு விபசாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில் அப்பெண்ணும், அவருடன் சேர்ந்து 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் விலைமாதர்களுக்கு அதிகமான ஊதியங்கள் வழங்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களும் தினசரி குவிகின்றன.
பின்பு நடைபெற்ற விசாரணையில், இவர் சுவிஸில் தவறான வழியில் தங்கியிருந்து விபச்சார தொழிலை நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த பெண்மணி, தான் விபச்சார தொழில் நடத்தவில்லை என்றும், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் ரீதியாக இல்லாமல் அவர்களின் உடலுக்கு தேவையான மாசஜ்களை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்
 

சுவிஸ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்: நடிகை


 சுவிஸில் நடைபெற்ற இனபாகுபாட்டிற்கு அந்நாடு தன்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என நடிகை ஒபரா வின்பிரே தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்களில் ஒருவராக திகழும் வின்பிரே(வயது 59), சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு சென்றிருந்தபோது அங்குள்ள மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தில் ஷாப்பிங் மேற்கொண்டார்.
அப்போது அக்கடை ஊழியர்கள் அங்குள்ள விலை உயர்ந்த கைப்பையை காட்ட மறுத்ததால், அவர்கள் தன் மீது இனபாகுபாடு காட்டியுள்ளனர் என்று சர்ச்சையை கிளப்பினார்.
இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக சுவிஸ் நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்திருந்தது.
இதுகுறித்து வின்பிரே கூறுகையில், வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் கைப்பையை பார்க்கும் வாய்ப்பை எனக்கு அளிக்காதது ஒரு பிரச்சனை இல்லை.
எனவே சுவிட்சர்லாந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் யாரேனும் ஒருவர் இந்த தவறினை செய்திருந்தால் நாடானது முன்னின்று மன்னிப்பு கேட்காது என்றும் தெரிவித்துள்ளார்

புதன், 14 ஆகஸ்ட், 2013

கஞ்சா பயன்படுத்துகின்றனர் :சிறைக்கைதிகள் அதிர்ச்சி !!!


 
சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சிறைக்கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சிறைக்கைதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 50 முதல் 80 சதவிகிதமானவர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறைக்காவலர்கள் கூறுகையில், சிறைக்கைதிகள் கஞ்சாவினை பயன்படுத்துவதால் சிறைகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றது.
இதனை தடுப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதால், மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை


சுவிட்சர்லாந்தில் சர்ச்சுகள், சந்தை மற்றும் நீச்சல் குளம் உட்பட பல்வேறு பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஏராளமான நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்காக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு சூரிச் நகரின் அருகே அமைந்துள்ள பெர்ம்கார்ட்டன் நகரத்தில், அகதிகளுக்கான முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நகரின் நிர்வாகம் சமீபத்தில் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் கோயில், சர்ச், நூலகம், நீச்சல் குளம், பள்ளி மைதானம் உள்ளிட்ட 32 பொது இடங்களில் நடமாட கூடாது என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகர மேயர் ரேமான் டெல்லன்பாக் வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில், பொது இடங்களில் அகதிகள் நடமாடும் போது, அவர்கள் மீது இன ரீதியான தாக்குதல் நடக்கவும், போதைப் பொருள் பழக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவர்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது இயலாது. எனவேதான் அகதிகள் பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்று தடை விதித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பெர்ம்கார்ட்டன் நகர நிர்வாகத்தின் தடை உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் இன ரீதியான பாரபட்சம் நிறைந்த நடவடிக்கை என்றும், மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்

சனி, 10 ஆகஸ்ட், 2013

பள்ளிக்கு சைக்கிளில் செல்வது ஆபத்தானது: ஆய்வில் !!


சுவிஸ் நாட்டில் குழந்தைகள் சைக்கிளின் மூலம் பள்ளிக்கு செல்வதால் அதிக ஆபத்துகளை சந்திக்கின்றார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஏராளமான குழந்தைகள் பள்ளிகளுக்கு சைக்கிளின் மூலம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த சைக்கிள் பயணமானது மிகவும் ஆபத்தானது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் சுவிஸ் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2012ம் ஆண்டில் 68 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக ஹெல்மெட் விற்பனை குறைந்துள்ளது. இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகளை சந்திக்கின்றனர்.
இது குறித்து மத்திய செயலாளர் பிரான்சிஸ்கா பீட்டர்ஹாண்ட்ஸ் (Franziska Peterhans) கூறுகையில், ஒரு குழந்தை சைக்கிள் பயிற்சியினை சரியான விதத்தில் கற்றுக்கொண்ட பின்பு 12 வயதில் தான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோர்கள் இதில் அதிக கவனம் எடுத்து தங்களின் குழந்தைகளுக்கு சரியான விதத்தில் பயிற்சியினை அளிக்க வேண்டும் என்று சைக்கிள் ஒட்டுனர் சங்கத்தின் தலைவர் ஜீன் பிரான்கோயிஸ் ஸ்ரிட் (Jean-Francois Steiert) தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கடும் புயல்: மரம் முறிந்து சுவிட்சர்லாந்தில் ஒருவர் பலி


 சுவிட்சர்லாந்தின் சூரிச் பிராந்தியத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேன்டென் பிரதேசத்தில் ரூட்டி பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 49 வயதான நபர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
அதேவேளை நான்கு மணிநேரத்தில் 29 ஆயிரத்து 155 மின்னல் வெட்டுகள் ஏற்பட்டதாக தொலைக்காட்சி வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
பெய்து வரும் கனமழைக்காரணமாக ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெனிவாவின் லாவ்சானே ரயில் போக்குவரத்து இன்று முற்றாக மேற்கொள்ளப்படவில்லை.
அதேவேளை மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

அதிர்ஷ்டவசமாக மலைச்சரிவிலிருந்து உயிர்தப்பிய 1 வயது குழந்தை
சுவிட்சர்லாந்தின் மலைச்சரிவில் நடந்த மோசமான விபத்தில் ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.
சுவிஸில் அல்ப் பார்லி என்னும் மலைச்சரிவு உள்ளது. இதன் வழியாக ஏதேனும் பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் 38 வயதுடைய சுவிஸ்ஸை சேர்ந்த நபர் தனது 31 வயதுடைய கனடிய மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோருடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது வாகனமானது 30 மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென்று நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
ஆனால், குழந்தையானது மரத்தின் கிளைகளின் இடையே சிக்கி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.
இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், இந்த மலைப்பகுதியானது மக்கள் பயணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியாகும்.
ஆனால் ஒரு குடும்பத்தினரை இந்த வழியாக பயணம் செய்வதற்கு அனுமதித்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது குழந்தையானது பாதுகாப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்

ரயில் விபத்தில் பலியான ஒட்டுனருக்கு சக பயணிகள் அஞ்சலி


சுவிட்சர்லாந்தில் கிராஞ்–பெரிஸ்–மார்னான்ட் என்னும் இடத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 24 வயது இளம் ஒட்டுனர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒட்டுனருக்கு ரயில்வே பணியாளர்கள் சங்கம் தங்கள் குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.
ரயில் விபத்து நடந்ததில் 25 நபர்கள் காயமடைந்துள்ளனர். இவர் ஒருவர் மட்டுமே இறந்துள்ளார்.
இந்த விபத்தில் பலியான இவர் சமீபத்தில் தான் ஒட்டுனர் பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி அஞ்சலியில் ஜெனிவாவின் தலைமை நிர்வாகி ஆன்ரியாஸ் மேயர் (Andreas Meyer) உட்பட மத்திய ரயில்வே நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே ஒட்டுனர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளாமல் தங்கள் குடும்பத்தினருடன் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தானது சுவிஸில் நடைபெற்ற மோசமான ரயில் விபத்து என்று விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது

சனி, 3 ஆகஸ்ட், 2013

தேசிய தினத்தை கோலகலமாக கொண்டாடும் சுவிஸ்


உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது.
பல மொழிகள் பேசப்படும் நாடான இதில் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு (Romansh) ஆகிய நான்கு தேசிய மொழிகள் உள்ளது.
இத்தொன்மைமிக்க சுவிட்சர்லாந்து ஓகஸ்டு 1, 1291 இல் நிறுவப்பட்டது. அன்று முதல் சுவிட்சர்லந்தில் ஓகஸ்ட் 1ம் திகதி தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடமும் ஒவ்வொரு மூலைகளிலும், மலைகளிலும் சுவிட்சர்லாந்து மக்கள் தேசிய நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்
Blogger இயக்குவது.