சுவிஸ் நாட்டில் குழந்தைகள் சைக்கிளின் மூலம் பள்ளிக்கு செல்வதால் அதிக ஆபத்துகளை சந்திக்கின்றார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஏராளமான குழந்தைகள் பள்ளிகளுக்கு சைக்கிளின் மூலம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த சைக்கிள் பயணமானது மிகவும் ஆபத்தானது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் சுவிஸ் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2012ம் ஆண்டில் 68 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக ஹெல்மெட் விற்பனை குறைந்துள்ளது. இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகளை சந்திக்கின்றனர்.
இது குறித்து மத்திய செயலாளர் பிரான்சிஸ்கா பீட்டர்ஹாண்ட்ஸ் (Franziska Peterhans) கூறுகையில், ஒரு குழந்தை சைக்கிள் பயிற்சியினை சரியான விதத்தில் கற்றுக்கொண்ட பின்பு 12 வயதில் தான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோர்கள் இதில் அதிக கவனம் எடுத்து தங்களின் குழந்தைகளுக்கு சரியான விதத்தில் பயிற்சியினை அளிக்க வேண்டும் என்று சைக்கிள் ஒட்டுனர் சங்கத்தின் தலைவர் ஜீன் பிரான்கோயிஸ் ஸ்ரிட் (Jean-Francois Steiert) தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக