திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை


சுவிட்சர்லாந்தில் சர்ச்சுகள், சந்தை மற்றும் நீச்சல் குளம் உட்பட பல்வேறு பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஏராளமான நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்காக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு சூரிச் நகரின் அருகே அமைந்துள்ள பெர்ம்கார்ட்டன் நகரத்தில், அகதிகளுக்கான முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நகரின் நிர்வாகம் சமீபத்தில் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் கோயில், சர்ச், நூலகம், நீச்சல் குளம், பள்ளி மைதானம் உள்ளிட்ட 32 பொது இடங்களில் நடமாட கூடாது என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகர மேயர் ரேமான் டெல்லன்பாக் வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில், பொது இடங்களில் அகதிகள் நடமாடும் போது, அவர்கள் மீது இன ரீதியான தாக்குதல் நடக்கவும், போதைப் பொருள் பழக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவர்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது இயலாது. எனவேதான் அகதிகள் பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்று தடை விதித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பெர்ம்கார்ட்டன் நகர நிர்வாகத்தின் தடை உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் இன ரீதியான பாரபட்சம் நிறைந்த நடவடிக்கை என்றும், மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.