சுவிட்சர்லாந்தில் விலைமாதர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சிகால் ஆற்றின் கரையில் சுற்றுலாவாசிகள் அதிகம் கூடும் இடங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார்கள் எழுந்தது.
இதனால் சுற்றுலாதளம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்ததால், இதனை தடுக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது சூரிச் நகரின் மேற்கு புறத்தில் மரத்தினாலான பாதுகாப்புடன் கூடிய அறையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கார்களில் வரும் ஓட்டுனர்களின் வசதிக்காக மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள், அங்கு தயாராக இருக்கும் 40 விலை மாதர்களில் விரும்பிய ஒருவரை தெரிவு செய்யலாம்.
அதன் பின் கட்டணம் குறித்து பேசி முடிவு செய்த பின்னர், அவருடன் வாடிக்கையாளர் இந்த செக்ஸ் பாக்சுக்குள் செல்லலாம்.
இந்த அறையின் வாசலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உட்பட பல வாசகங்கள் தொங்க விடப்பட்டிருக்கும்.
விலைமாதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாக்ஸ், வருகிற 26ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என நகர நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாலை வேளையில் தொடங்கும் இந்த அறையின் சேவை மறுநாள் காலை 5 மணியுடன் முடிவடையும் என்றும், பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக