வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கடும் புயல்: மரம் முறிந்து சுவிட்சர்லாந்தில் ஒருவர் பலி


 சுவிட்சர்லாந்தின் சூரிச் பிராந்தியத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேன்டென் பிரதேசத்தில் ரூட்டி பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 49 வயதான நபர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
அதேவேளை நான்கு மணிநேரத்தில் 29 ஆயிரத்து 155 மின்னல் வெட்டுகள் ஏற்பட்டதாக தொலைக்காட்சி வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
பெய்து வரும் கனமழைக்காரணமாக ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெனிவாவின் லாவ்சானே ரயில் போக்குவரத்து இன்று முற்றாக மேற்கொள்ளப்படவில்லை.
அதேவேளை மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.