4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன்
சுவிஸில் உலக சாதனைக்காக 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பாட்ரிக் கெர்பர் சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்தவர் பெட்ரிக் கெர்பர். 32 வயதான இவர் சிறுவயதிலேயே 820 மீற்றர் உயரத்திலிருந்து 2 நிமிடங்கள் 3 வினாடிகளிலிருந்து பறந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது ஆல்ப்ஸ் மலையிலிருந்து 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்துள்ளார்.
இது குறித்து கெர்பர் கூறுகையில், இது என்னுடைய நீண்ட நாள் ஆசையாகும். மேலும் நான் பறப்பதற்கு முன்னதாக பனி மற்றும் காற்று நிலை குறித்து அறிந்து கொண்டேன்.
அதன் பின்பு பறக்கத்தொடங்கினேன். நான் கீழே இறங்கிய பின்பு என்னுடைய பாரசூட்டானது விரிந்து கொண்டது. இந்த சாதனையை எப்படி செய்தேன் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆல்ப்ஸ் மலையில் சாதனையில் ஈடுபட்ட 30 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும், சமீபத்தில் சண்டைப் பயிற்சியாளரான மார்க் சட்டன் சாகசத்தில் ஈடுபடும்போது மலைப்பகுதியில் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
{காணொளி இணைப்பு)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக