புதன், 21 அக்டோபர், 2015

சுவிசில் இலவச போக்குவரத்து வசதி:சுற்றுலா பயணிகளுக்கு ?

சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு 
செய்துள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள லூசெர்ன் நகரம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக 2017ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அரசின் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு 
செய்துள்ளது.
இது தொடர்பாக லூசெர்ன் நகரின் பொருளாதார விவகாரங்களுக்கான கொமிஷ்னர் பீட்டர் பௌச்சர் கூறியதாவது, லூசெர்ன் நகரம் மிகவும் தொன்மையான நகரம் இங்குள்ள ஹொட்டல்கள் 100 ஆண்டுகள் பழமையானவை.
மேலும் இங்குள்ள வாட்ச் மற்றும் நகைக்களும் நீண்ட பாரம்பரியத்தை உடையதாக விளங்கி வருகின்றன.
எனவே இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சுற்றுலா பயணிகளுக்கு இலவச போக்குவரத்து வசதி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக மாநகராட்சி நிர்வாகம் லூசெர்ன் சுற்றுலா துறையுடன் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி 2017ஆம் ஆண்டில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நகர பேருந்து மற்றும் ரயில் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்திகொள்ளும் வசதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

மக்களுக்குபாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை’: காரணம் தெரியுமா?

சர்வதேச அளவில் கோடீஸ்வர குடிமக்களை கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பவதில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் நாளை(18.10.15) பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், பொது தேர்தலுக்கு உண்டான எந்த பரபரப்பும் இன்றி சுவிஸ் மக்கள் மிக இயல்பாகவே இருந்து
 வருகின்றனர்.
இந்த காட்சி இன்று மட்டுமல்ல, பல வருடங்களாக பாராளுமன்ற பொது தேர்தலுக்கு அந்நாட்டு குடிமக்கள் அதிகம் முக்கியத்துவம் 
அளிப்பதில்லை.
சுமார் 82 லட்சம் குடிமக்களை மட்டுமே உடைய அந்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்கள் 40 லட்சத்திற்கும் குறைவானவர்களே.
கடந்த 80 ஆண்டுகள் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில். வாக்களிக்கும் சதவிகிதம் 48%, 49%, 50% எந்த வீதத்திலேயே இருந்து 
வருகிறது.
தற்போது வெளியான புள்ளிவிபரத்திலும் கூட, நாளைய பாராளுமன்ற தேர்தலில் 49.1 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்க வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், வாக்களிக்க செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக கொண்டுள்ள நாடுகளில் போலந்து, லிதுனியா மற்றும் ரோமானியா நாடுகளுக்கு அடுத்த 4-வது இடத்தில் சுவிட்சர்லாந்து இடம் பெற்றுள்ளது.
பெரும்பாலான குடிமக்கள் வாக்களிக்க விரும்பாததற்கு அந்நாட்டின் அரசாட்சி முறை மட்டுமே காரணமாக
 பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டின் ஜனாதிபதி மாறிக்கொண்டே இருப்பார். இதற்கு குடிமக்களின் வாக்கெடுப்பும் அவசியமாகும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நேரடி ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருவதால், உள்நாட்டு விவகாரங்கள் முதல் வெளிநாட்டு விவகாரங்கள் வரை அரசு மட்டுமே சுயமாக முடிவு எடுக்க
 முடியாது.
ஒவ்வொரு விவகாரத்திற்கும் தீர்வு காண குடிமக்களிடம் அரசாங்க வாக்கெடுப்பை நடத்தும். 6 மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு வருடத்திற்கு ஒரு முறை என அடிக்கடி வாக்கெடுப்பில் குடிமக்கள் ஈடுப்படுவதால், பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் அதிகம் கவனம் 
செலுத்துவதில்லை.
நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மண்டல வாரியாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், வாக்களிக்க வரும் குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதற்கு இந்த நேரடி ஜனநாயக ஆட்சி நடைமுறை தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இளம்பெண்ணை கொலை செய்த நபர்: 28 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை

இளம்பெண் ஒருவர் உடலுறவுக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுவிஸ் குடிமகன் ஒருவர் அவரை கொலை செய்த குற்றத்திற்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
சுவிஸின் பேசில் மண்டலத்தில் உள்ள Karlsruhe நகரில் தற்போது 48 வயதாகும் நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
கடந்த 1987ம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர், அந்த நபரிடம் உதவி கோரி வந்துள்ளார்.
இளம்பெண்ணின் அழகில் மயங்கிய அந்த நபர், பெண்ணிற்கு உதவிய பிறகு அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர், ஓரிடத்தில் பெண்ணை மடக்கி தன்னுடன் உல்லாசமாக இருக்க வரவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், நபரின் விருப்பத்திற்கு இடம் கொடுக்காத அந்த பெண் அவரை அவமதித்தாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் பெண்ணின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார், நபரை பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர்.
நபரை கைது செய்தபோது அவருக்கு 20 வயது என்பதால், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்று வந்துள்ளது.
சுமார், 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கின் தன்மை குறித்து விசாரணை செய்த நீதிபதிகள், கொலையாளி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருக்கு 6 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

இளைஞன் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த போது நிகழ்ந்த விபரீத சம்பவம்?

சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன் ஒருவன் வேகமாக வந்த ட்ராம் வண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி அந்நாட்டு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் கூட, பாதசாரிகள் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு பிரத்தியோக வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பொலிசாரின் எச்சரிக்கை அறிவிப்புகளை மீறியும் இளைஞர்களின் அஜாக்கிரதையில் சில விபத்துக்கள் நிகழ்வது பொலிசாரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை மாலை 5.15 மணியளவில், பேசில் மண்டலத்தில் உள்ள Munchenstein என்ற நகரில் 18 வயதுள்ள வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது, வாலிபர் தனது கைப்பேசியை காதுகளில் இணைத்துக்கொண்டு இசையை ரசித்தவாறு நடந்து வந்துள்ளார்.
மேலும், தனது கைப்பேசியை உபயோகித்துக்கொண்டே சாலையில் நடந்துள்ளார். ட்ராம்-11 வழிச்சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வந்த ட்ராம் வண்டி ஒன்று அவர் மீது பலமாக மோதி எதிர் தடத்தில் தூக்கி எரிந்துவிட்டு சென்றுள்ளது.
படுகாயம் அடைந்த அந்த வாலிபரை பொதுமக்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து வியாழன் அன்று செய்தி வெளியிட்ட பொலிசார், சாலையை கடக்கும்போது தவறாமல் விதிமுறைகளை பின்பற்றுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 14 அக்டோபர், 2015

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவுக்கு பெருகும் ஆதரவு

தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்சிகா கிருஷ்ணானந்தன் பேர்ண் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில் 
போட்டியிடுகின்றார்.
புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை நிலை நிறுத்துவதற்காக அவருக்கு வாக்களித்து, தமிழ் குரலாக பாராளுமன்றம் செல்ல வைக்க வேண்டும் என அவரை ஆதரித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
சுவிஸ் வங்கி அறிக்கை உலகிலேயேசுவிஸ் சில் வசிப்பவர்கள் தான் பெரும்பணக்காரர்கள் ?

சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் தான் உலகிலேயே மிகவும் வசதியானவர்கள் என்பது அந்நாட்டின் வங்கி ஒன்றின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
சுவிஸ் நாட்டின் சூரிச்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரெடிட் சுயிஸ் (Credit Suisse) என்ற நிறுவனம் உலகில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் வசதியானவர்கள் என்பது குறித்த 2015ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் சராசரியாக 567,100 டொலர் சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்
அடுத்த இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்நாட்டில் வசிப்பவர்களின் சராசரி சொத்தின் மதிப்பு 400, 811 டொலராகும்.
தனி நபர் வருமானத்தின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் சுவிசில் பணக்காரர்களிடையே பெரும் ஏற்ற தாழ்வு உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த ஏற்ற தாழ்வுகளை சரிசெய்வதற்கு சுவிஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி உலக வல்லரசான அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது.
கடந்த மாதம் ஜேர்மனியை சேர்ந்த ஒரு நிதி நிறுவனம் உலகில் மிகவும் வசதியானவர்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலும் சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களே முதலிடம் பிடித்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
ஒரு கிலோ மீற்றருக்கு தண்டவாளத்தில்காரை ஓட்டிய நபர்?

சுவிஸ் நாட்டில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூர் நகரை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் பள்ளமான சாலையில் தனது காரில் சென்று
கொண்டிருந்தார்.
சாலையில் புழுதி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் Rhaetion ரயில்பாதை அருகில் இருந்த சாலை சரியாக அமைக்கப்படாமல் இருந்ததால் ரயில் தண்டவாளத்தில் தனது காரை இயக்க தொடங்கினார்.
ஒரு கிலோ மீற்றருக்கு மேலாக தண்டவாளத்தில் சென்ற கார் பின்னர் விபத்துக்குள்ளாகி நின்றது.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிறு காயங்களுடன் கண்டொனல்(Cantonal) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>வெள்ளி, 9 அக்டோபர், 2015

போதை பொருளுடன் சாலையில் சிக்கிய நபர்: வீட்டில் சோதனை அதிர்ச்சியில் பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் வாகன சோதனையில் போதை பொருளுடன் சிக்கிய நபரின் வீட்டை அதிரடியாக பரிசோதனை செய்ததில் கட்டுகட்டாக பணம் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
சுவிஸில் உள்ள பெர்ன் மண்டலத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய 22 வயது வாலிபரின் காரை நிறுத்தி சோதை செய்தபோது 3 கிலோ எடையுள்ள கொக்கைன் வகை போதை பொருளை பொலிசார் கண்டுபிடித்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், Liebefeld நகரில் உள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் வசித்து வருவது தெரியவந்தது.

நபரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற பொலிசார் அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர்.
வீட்டிற்குள் 40 வயதான நபர் உள்பட 2 பேர் இருந்துள்ளனர். வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்தபோது, அங்கு கட்டு கட்டாக பணமும், கூடுதலாக 10 கிலோ எடையுள்ள போதை மருந்தும் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பணம் மற்றும் போதை பொருளை கைப்பற்றிய பொலிசார், 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மூவரிடமும் நடத்திய விசாரணையில், ஒருவர் மீது எந்த குற்றமும் இல்லாததால், அவரை விடுதலை செய்தனர்.
பின்னர், 22 மற்றும் 40 வயதுடைய நபர்கள் சுவிஸ் நாட்டிற்குள் போதை மருந்துக்களை கடத்தி வந்து மக்களுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், இருவரையும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சில தினங்களுக்கு பிறகு விசாரணைக்கு நீதிமன்றத்தில் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>புதன், 7 அக்டோபர், 2015

பாரளுமன்ற தேர்தலில் தர்சிகாவை ஆதரிக்கவேண்டும்***

எதிர் வரும் 18 திகதி நடைபெறவுள்ள சுவிஸர்லாந்து  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை ஆதரிக்குமாறு பேர்ண் மாநிலத்தின் வாழும் தமிழ் மக்களிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினர் ஏம் .கே சிவஜிலிங்கம் வேண்டுகோள்

 விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால்  பல லட்சத்திற்கு மேற்பட்ட எமது மக்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்  தாம் வாழும் நாடுகளில் பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தாலும் அரசியலில் குறிபிடத்தக்க வகையில்  இதுவரை எமது மக்கள் முன்னேற்றம் 

அடையவில்லை கனடா நாட்டில சி, ராதிகா பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளர் ஏனையவர்கள் நகராட்சி மன்றத்தில் அங்கம்வகிக்கின்றனர் எனவே இந்த முறை பாராளுமன்றத்தில் போட்டியிடும் தர்சிகாவை பேர்ண் வாழ் தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்

 நடைபெறவுள்ள தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் 2500 மேற்பாட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் அவர்கள் இரண்டு  விருப்பு வாக்கு அளிக்கமுடியும் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்தால் தர்சிகாவின் வெற்றி உறுதிசெய்யப்படும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் சுவிஸ்பாராளுமன்றத்தில

 தமிழ் குரல்  ஒலிக்க  எமது பிரச்சினைகளை சர்வதேச ரீதியாக உரிமையுடன் பேசவேண்டும் எனவே எதிர் கால பிள்ளைகளின் நலன் கருதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவக்க பேர்ண் வாழ் அனைத்து தமிழ் மக்களும் வாக்குஅளிக்குமாறு உரிமையுடனும் அன்புடனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

என்ஜினுக்குள் விமானம் புறப்படும்போது புகுந்த பறவை

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட நேரத்தில் எதிர்பாராத விதமாக பறவை ஒன்று என்ஜினிற்குள் புகுந்ததால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அந்த விமானம் ஸ்பெயின் நாட்டில் உள்ள Palma de Mallorca என்ற நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்துள்ளது.

இந்நிலையில், சரியாக 11 மணியளவில் ஓடுபாதையில் விமானம் பறந்தபோது, திடீரென அதன் என்ஜினிற்குள் பறவை ஒன்று எதிர்பாராத விதமாக புகுந்துள்ளது.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உடனடியாக உணர்ந்த விமானிகள் விமானத்தை ஓடுபாதையில் இருந்து மேலே எழுப்பும் முயற்சியை கைவிட்டனர்.

பின்னர், விமானத்தை புறப்பட்ட இடத்திற்கு திருப்பப்பட்டு விமானம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த விமான நிறுவனத்தை சேர்ந்த Wilhelm Baldia என்பவர் பேசியபோது, விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் பறவை புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணத்தை உடனடியாக ரத்து செய்து என்ஜின்கள் நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் விமானத்திற்கும் பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

எனினும், என்ஜின் பகுதிக்குள் பறவை நுழைவது மிக அரிதாக நிகழும் என்றும் அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>Blogger இயக்குவது.