ஞாயிறு, 4 அக்டோபர், 2015

என்ஜினுக்குள் விமானம் புறப்படும்போது புகுந்த பறவை

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட நேரத்தில் எதிர்பாராத விதமாக பறவை ஒன்று என்ஜினிற்குள் புகுந்ததால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அந்த விமானம் ஸ்பெயின் நாட்டில் உள்ள Palma de Mallorca என்ற நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்துள்ளது.

இந்நிலையில், சரியாக 11 மணியளவில் ஓடுபாதையில் விமானம் பறந்தபோது, திடீரென அதன் என்ஜினிற்குள் பறவை ஒன்று எதிர்பாராத விதமாக புகுந்துள்ளது.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உடனடியாக உணர்ந்த விமானிகள் விமானத்தை ஓடுபாதையில் இருந்து மேலே எழுப்பும் முயற்சியை கைவிட்டனர்.

பின்னர், விமானத்தை புறப்பட்ட இடத்திற்கு திருப்பப்பட்டு விமானம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த விமான நிறுவனத்தை சேர்ந்த Wilhelm Baldia என்பவர் பேசியபோது, விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் பறவை புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணத்தை உடனடியாக ரத்து செய்து என்ஜின்கள் நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் விமானத்திற்கும் பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

எனினும், என்ஜின் பகுதிக்குள் பறவை நுழைவது மிக அரிதாக நிகழும் என்றும் அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.