வெள்ளி, 9 அக்டோபர், 2015

போதை பொருளுடன் சாலையில் சிக்கிய நபர்: வீட்டில் சோதனை அதிர்ச்சியில் பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் வாகன சோதனையில் போதை பொருளுடன் சிக்கிய நபரின் வீட்டை அதிரடியாக பரிசோதனை செய்ததில் கட்டுகட்டாக பணம் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
சுவிஸில் உள்ள பெர்ன் மண்டலத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய 22 வயது வாலிபரின் காரை நிறுத்தி சோதை செய்தபோது 3 கிலோ எடையுள்ள கொக்கைன் வகை போதை பொருளை பொலிசார் கண்டுபிடித்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், Liebefeld நகரில் உள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் வசித்து வருவது தெரியவந்தது.

நபரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற பொலிசார் அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர்.
வீட்டிற்குள் 40 வயதான நபர் உள்பட 2 பேர் இருந்துள்ளனர். வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்தபோது, அங்கு கட்டு கட்டாக பணமும், கூடுதலாக 10 கிலோ எடையுள்ள போதை மருந்தும் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பணம் மற்றும் போதை பொருளை கைப்பற்றிய பொலிசார், 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மூவரிடமும் நடத்திய விசாரணையில், ஒருவர் மீது எந்த குற்றமும் இல்லாததால், அவரை விடுதலை செய்தனர்.
பின்னர், 22 மற்றும் 40 வயதுடைய நபர்கள் சுவிஸ் நாட்டிற்குள் போதை மருந்துக்களை கடத்தி வந்து மக்களுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், இருவரையும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சில தினங்களுக்கு பிறகு விசாரணைக்கு நீதிமன்றத்தில் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.