இளம்பெண் ஒருவர் உடலுறவுக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுவிஸ் குடிமகன் ஒருவர் அவரை கொலை செய்த குற்றத்திற்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சுவிஸின் பேசில் மண்டலத்தில் உள்ள Karlsruhe நகரில் தற்போது 48 வயதாகும் நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
கடந்த 1987ம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர், அந்த நபரிடம் உதவி கோரி வந்துள்ளார்.
இளம்பெண்ணின் அழகில் மயங்கிய அந்த நபர், பெண்ணிற்கு உதவிய பிறகு அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர், ஓரிடத்தில் பெண்ணை மடக்கி தன்னுடன் உல்லாசமாக இருக்க வரவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், நபரின் விருப்பத்திற்கு இடம் கொடுக்காத அந்த பெண் அவரை அவமதித்தாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் பெண்ணின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார், நபரை பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர்.
நபரை கைது செய்தபோது அவருக்கு 20 வயது என்பதால், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்று வந்துள்ளது.
சுமார், 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கின் தன்மை குறித்து விசாரணை செய்த நீதிபதிகள், கொலையாளி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருக்கு 6 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக