சனி, 17 அக்டோபர், 2015

மக்களுக்குபாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை’: காரணம் தெரியுமா?

சர்வதேச அளவில் கோடீஸ்வர குடிமக்களை கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பவதில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் நாளை(18.10.15) பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், பொது தேர்தலுக்கு உண்டான எந்த பரபரப்பும் இன்றி சுவிஸ் மக்கள் மிக இயல்பாகவே இருந்து
 வருகின்றனர்.
இந்த காட்சி இன்று மட்டுமல்ல, பல வருடங்களாக பாராளுமன்ற பொது தேர்தலுக்கு அந்நாட்டு குடிமக்கள் அதிகம் முக்கியத்துவம் 
அளிப்பதில்லை.
சுமார் 82 லட்சம் குடிமக்களை மட்டுமே உடைய அந்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்கள் 40 லட்சத்திற்கும் குறைவானவர்களே.
கடந்த 80 ஆண்டுகள் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில். வாக்களிக்கும் சதவிகிதம் 48%, 49%, 50% எந்த வீதத்திலேயே இருந்து 
வருகிறது.
தற்போது வெளியான புள்ளிவிபரத்திலும் கூட, நாளைய பாராளுமன்ற தேர்தலில் 49.1 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்க வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், வாக்களிக்க செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக கொண்டுள்ள நாடுகளில் போலந்து, லிதுனியா மற்றும் ரோமானியா நாடுகளுக்கு அடுத்த 4-வது இடத்தில் சுவிட்சர்லாந்து இடம் பெற்றுள்ளது.
பெரும்பாலான குடிமக்கள் வாக்களிக்க விரும்பாததற்கு அந்நாட்டின் அரசாட்சி முறை மட்டுமே காரணமாக
 பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டின் ஜனாதிபதி மாறிக்கொண்டே இருப்பார். இதற்கு குடிமக்களின் வாக்கெடுப்பும் அவசியமாகும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நேரடி ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருவதால், உள்நாட்டு விவகாரங்கள் முதல் வெளிநாட்டு விவகாரங்கள் வரை அரசு மட்டுமே சுயமாக முடிவு எடுக்க
 முடியாது.
ஒவ்வொரு விவகாரத்திற்கும் தீர்வு காண குடிமக்களிடம் அரசாங்க வாக்கெடுப்பை நடத்தும். 6 மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு வருடத்திற்கு ஒரு முறை என அடிக்கடி வாக்கெடுப்பில் குடிமக்கள் ஈடுப்படுவதால், பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் அதிகம் கவனம் 
செலுத்துவதில்லை.
நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மண்டல வாரியாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், வாக்களிக்க வரும் குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதற்கு இந்த நேரடி ஜனநாயக ஆட்சி நடைமுறை தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.