புதன், 21 அக்டோபர், 2015

சுவிசில் இலவச போக்குவரத்து வசதி:சுற்றுலா பயணிகளுக்கு ?

சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு 
செய்துள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள லூசெர்ன் நகரம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக 2017ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அரசின் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு 
செய்துள்ளது.
இது தொடர்பாக லூசெர்ன் நகரின் பொருளாதார விவகாரங்களுக்கான கொமிஷ்னர் பீட்டர் பௌச்சர் கூறியதாவது, லூசெர்ன் நகரம் மிகவும் தொன்மையான நகரம் இங்குள்ள ஹொட்டல்கள் 100 ஆண்டுகள் பழமையானவை.
மேலும் இங்குள்ள வாட்ச் மற்றும் நகைக்களும் நீண்ட பாரம்பரியத்தை உடையதாக விளங்கி வருகின்றன.
எனவே இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சுற்றுலா பயணிகளுக்கு இலவச போக்குவரத்து வசதி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக மாநகராட்சி நிர்வாகம் லூசெர்ன் சுற்றுலா துறையுடன் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி 2017ஆம் ஆண்டில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நகர பேருந்து மற்றும் ரயில் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்திகொள்ளும் வசதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.