சனி, 24 மே, 2014

தீவிரம் தவளைகளை காக்கும் முயற்சியில் சுவிஸ்

சுவிசில் தவளைகளை காப்பாற்ற சுமார் 260,00 பிராங்குகள் செலவிட அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுவிசில் சுரங்கப்பாதை கட்டுவதால் அங்கு பாதிக்கபடவிருந்த 100 தவளைகளை வேறு இடம் மாற்ற போவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதுர்ன் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுவதால், அங்குள்ள அரிய வகை தவளைகளை 260,000 பிராங்குகள் செலவில் இடம் பெயர்க்க முடிவு செய்துள்ளது.
மத்திய சாலைகள் அமைச்சகம் 500 மில்லியன் பிராங்குகள் செலவில் பெல்சென் சுரங்கப்பாதயை புதுபிக்க உள்ளது.
இதனால் அந்த சுரங்கபாதையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தவளைகளை இடம் பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதை செயல்படுத்த இந்த மாதத்திலிருந்தே இயற்கை பாதுகாப்பு குழுவினர் இரவுகளில் செயல்பட்டு, தவளைகளை பிடித்து இடம் பெயர்த்து வருகின்றனர்.
5.5 செ.மீ நீளம் வளரும் மிட்வைஃப் டோட்ஸ் என அழைக்கப்படும் இந்த தவளைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால், இதனை பாதுகாப்பதில் அரசு திவீரமாக இறங்கி இதுவரை 10 தவளைகள் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தவளைகள் கடந்த 2013ம் ஆண்டில் சுவிசின் சிறந்த விலங்காக அறிவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
 


 

சுவிசில் களைகட்டும் "வையின்" விற்பனை

 சுவிசர்லாந்து வையின் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகமாக வைன் விற்பனை செய்யும் சுவிசின் ஜெனிவா மாகாணத்தில், சுமார் 3 மில்லியன் வைன் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஃப்ரீ பொர்ட்ஸ் மற்றும் வேர்ஹொசஸ் ஆகிய வைன் நிறுவனங்கள், தற்போது தங்களது 125 ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
எனவே இந்த விழாவை முன்னிட்டு காண்டன் மாகாணத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனங்கள், வையின் மற்றும் மற்ற மது பானங்களுக்கு வரி் செலுத்துவதை இலவசமாக்கியுள்ளது.
இதனைதொடர்ந்து மொல்தவியா என்ற கிராமம் 1.5 மில்லியன் வைன் பாட்டில்களை கொண்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் சுவிஸ் நகரத்தில் வையின் தயரிப்பதற்கான காரணத்தை கூறுகையில், தங்கள் நிறுவனத்தின் வெர்ஹவுஸ் 22 கால் பந்து மைதானத்தை விட பெரியதாக இருப்பதாகவும், ஐரோப்பிய நாட்டின் மைய பகுதியில் அமைந்துள்ளதாகவும் நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 10,400 பரப்பளவு கட்டடத்தை இதற்காக பயன்படுத்தபோவதாகவும் அவர்கூறியுள்ளார்.

 

 

வியாழன், 22 மே, 2014

விலைமாதுக்களாய் மாற்றப்படும் அப்பாவி பெண்கள்

சுவிசில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக பெண்கள் கடத்தப்பட்டு விலைமாதுக்களாய் மாற்றப்படுகின்றனர்
சுவிசில் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளப்படும் சம்பவங்கள் ஏராளமாய் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2007ம் ஆண்டில் தலைநகர் பெரினின் நியடூ என்ற நகரில் 23 பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்த பெண்களை மீட்டு, அவர்களுக்கு தலைவியாக இருந்த பெண்ணை கைது செய்திருந்தனர்.
தற்போது இதுபோல் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைப்பது வளர்ந்து வருவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை காண வேண்டும் என சுவிஸ் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

திங்கள், 19 மே, 2014

பரபரப்பை ஏற்படுத்திய குட்டி கரடி

சுவிசர்லாந்தில் கரடி குட்டி ஒன்று 9 செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் கிராபுடன் மாகாணத்தில் உள்ள m-25 என்ற இனத்தை சார்ந்த கரடி குட்டி ஒன்று ”லொவர் எங்கடென்” என்ற பகுதியில் திரிந்து கொண்டிருந்த 9 ஆடுகளை கிழித்து கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பயத்தில் ஆழ்ந்ததுடன், இந்த கரடி குட்டியை கொன்றுவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த WWF சுற்றுசூழல் குழு இந்த வகை கரடிகள் அழிந்து வருவதால் அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளது.
மேலும் வனவிலங்கு துறை அலுவலகர்களால் கொல்லப்பட்ட m-13 மற்றும் JJ3 கரடிகளை இந்த கரடிகளையும் கொல்லும் அபாயம் மீண்டும் ஏற்படகூடாது என இந்த குழு எச்சரித்துள்ளது





வியாழன், 15 மே, 2014

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி தனது இரண்டு குட்டிகளையும் கொன்றதுக்கு கண்டனம் தெரிவித்து ரயில் ஓட்டுனர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது.
இதில் தந்தை கரடியான மிஷா கடந்த 3ம் திகதியில் தனது குட்டியை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருக்கையில் எதிர்பாரதவிதமாக அக்குட்டி கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் மற்றொரு கரடி குட்டியையும், தந்தை கரடி அதேபோல் விளையாடி கொன்றுள்ளது.
இதனால் பூங்காவின் மேலாளர்கள் வனவிலங்கு துறையினர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், அந்நாட்டில் வசிக்கும் கேர்ட் நோன்லிட்ஸ் என்பவர் அந்த பூங்காவின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவர், நாய் வளர்ப்பை தனது பொழுதுபோக்காக கொண்டவர், இதுகுறித்து அவர் கூறுகையில், கரடிகள், இவ்வாறு தனது குட்டிகளை கொல்வது இயல்பாக நடப்பது, ஆனால் பூங்காவினர் தான் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


ஞாயிறு, 11 மே, 2014

பண விவகாரத்தில் தகவல்களை தர முடியாது: சுவிஸ்

 இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன.
இந்த விவகாரத்தில் ஜேர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல்களை இந்திய அரசு உயர்நீதிமன்றம் தாக்கல் செய்தது. இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பண கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் வித்மர் ஸ்லம்புக்கு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில் எச்எஸ்பிசி வங்கி கிளைகளில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களின் கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் தகவல்களை தர முடியாது என சுவிஸ் மறுத்துள்ளது.
இதுகுறித்து சுவிஸ் நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், வரி ஏய்ப்பு செய்வோர் மீது இந்தியாவை போலவே சுவிஸ் அரசும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. இந்தியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு இடையே கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச வரி விதிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரட்டை வரிவிதிப்பு முறை நடைமுறையில் உள்ளது.
வங்கி தொடர்பாக ஏற்கனவே இந்தியா கோரி வந்த பல்வேறு கோரிக்கைகளில் சுவிஸ் முடிந்தவரை சாதகமான பதில்களை அளித்து வந்துள்ளது.
தற்போது சர்வதேச விதிகளின்படி ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட தகவல்களை தர இயலாது என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 மே, 2014

கணவனை காப்பாற்ற நதியில் மூழ்கிய மனைவி

சுவிட்சர்லாந்தில் கணவனை காப்பாற்றுவதற்கு நதியில் மூழ்கி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன், மனைவி இரண்டு பேரும், தங்களது இரண்டு வளர்ப்பு நாய்களை கூட்டிக் கொண்டு, LOMBOCH RIVER என்ற ஆற்றின் கரை வழியே கரை ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், இரண்டு நாய்களில் ஒன்று துள்ளிக்குதித்து ஓடி, ஆற்றில் விழுந்து விட்டது.
 
அந்த நாயைக் காப்பாற்ற, கணவனும் ஆற்றில் குதித்துள்ளார், இதனைக் கண்ட மனைவியும், தனது வளர்ப்பு நாயையும், கணவனையும் காப்பாற்றும் பொருட்டு ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த ஆறு 11கி.மீ நீளம் கொண்டது, மேலும் LAKE THUN என்ற ஏரியுடன் சென்று கலக்கும் மிகப் பெரிய நீளமான ஆறு ஆகும், ஆகவே இந்த 55 வயதுப் பெண் ஆற்றில் குதித்தவுடன், வெள்ளப் பெருக்கினால் அடித்துச் செல்லப்படுகையில், பயங்கர காயங்களுக்குள்ளானார்.
 
அவரது கணவன் தனது நாயைக் காப்பாற்றியவுடன், தனது மனைவியை ஆற்றுக்குள் சுயநினைவின்றி மீட்டெடுத்து, போது மக்களின் உதவியுடன் முதலுதவிகள் செய்து காப்பாற்ற முயற்சிகள் செய்துள்ளார்.
மேலும் அவசரஊர்தி மூலம் மருத்துவமனை கொண்டு செல்லும்வழியில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
 

கொத்திரைச்சியின் விலை ஏற்றம்: ஏக்கத்தில் சுவிஸ் பிரியர்கள்

இறைச்சி தயாரிப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் தேசிய உணவாகிய (CERVELAT) கொத்திறைச்சியின் விலை ஏற்றத்தைக் குறித்து முன்னதாகவே அறிவித்துள்ளார்கள்.
சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்களின் சங்கம், வியாழக்கிழமையன்று தனது வாடிக்கையாளர்களுக்கு கொத்திறைச்சியின் விலை ஏற்றம் குறித்து அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பன்றி இறைச்சியின் விலை 15% விலை உயர்வும், கொத்திறைச்சி மற்றும் இதரவகை இறைச்சிகளின் விலை 10% விலை ஏற்றத்தையும் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சுவிஸ் மக்களின் மிகப் பிரியமான உணவான பன்றி கொத்திறைச்சியின் விலை ஏறுமுகமாக உள்ளது குறித்து சுவிஸ் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுவிஸ் மக்களின் தேசிய உணவாகிய CERVELAT என்று அழைக்கபடும் கொத்திறைச்சியின் விலை கூடிக் கொண்டே போகின்றது.
இதற்கு காரணமாக சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், பன்றி, மாடு, ஆடு போன்ற கால்நடைகளின் பராமரிப்பு செலவுகள் பன் மடங்கு கூடிவிட்டதாகவும், அவைகளின் இறைச்சியை பாதுகாத்து, பதப்படுத்தும் செலவுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் இவைகளை ஈடுகட்ட விலை உயர்வுதான் தவிர்க்கமுடியாத ஒரே வழி என்றும் கூறியுள்ளது.
 

வியாழன், 1 மே, 2014

தபால்களை பிரிப்பவர்கள் நடத்திய திருட்டு

 சுவிட்சர்லாந்தில் தபால்களை பிரிப்பவர்கள் 1,14,000 டாலர்கள் மதிப்புள்ள கருவிகளை திருடியுள்ளார்.
லுசேன் வாயூத் மண்டலத்தில் உள்ள சுவிஸ் தபால் அலுவலகத்தின் தேசிய அஞ்சலக ஆபரேட்டர்களாக பணிபுரியம் இரண்டு நபர்கள் 1.00,000 பிராங்குகள் (1,14,000) டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும், கருவிகளும் அடங்கிய பார்சல் பெட்டிகளை அபகரித்து திருடி சென்றுள்ளனர்.
இந்த இரண்டு திருடர்கரும் 40 வயது மிக்க எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் என்று NORD வாயூத்மண்டல நீதிமன்றம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திருடிய பொருட்களை, அவர்களது குடியிருப்பில் பதுக்கி வைத்ததன் மூலம் பொலிசார் அவர்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.
இந்த திருடர்கள் இருவரும் நீதிமன்றத்தில் தங்களது திருட்டினை நியாயப்படுத்தும் வகையில், தாங்கள் பகுதி நேர ஊழியர்கள் என்றும், தங்களுக்கு சம்பளம் போதிய அளவு இல்லாததால் இவ்வாறு திருடியதாக கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு 18,000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
Blogger இயக்குவது.