செவ்வாய், 6 மே, 2014

கொத்திரைச்சியின் விலை ஏற்றம்: ஏக்கத்தில் சுவிஸ் பிரியர்கள்

இறைச்சி தயாரிப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் தேசிய உணவாகிய (CERVELAT) கொத்திறைச்சியின் விலை ஏற்றத்தைக் குறித்து முன்னதாகவே அறிவித்துள்ளார்கள்.
சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்களின் சங்கம், வியாழக்கிழமையன்று தனது வாடிக்கையாளர்களுக்கு கொத்திறைச்சியின் விலை ஏற்றம் குறித்து அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பன்றி இறைச்சியின் விலை 15% விலை உயர்வும், கொத்திறைச்சி மற்றும் இதரவகை இறைச்சிகளின் விலை 10% விலை ஏற்றத்தையும் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சுவிஸ் மக்களின் மிகப் பிரியமான உணவான பன்றி கொத்திறைச்சியின் விலை ஏறுமுகமாக உள்ளது குறித்து சுவிஸ் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுவிஸ் மக்களின் தேசிய உணவாகிய CERVELAT என்று அழைக்கபடும் கொத்திறைச்சியின் விலை கூடிக் கொண்டே போகின்றது.
இதற்கு காரணமாக சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், பன்றி, மாடு, ஆடு போன்ற கால்நடைகளின் பராமரிப்பு செலவுகள் பன் மடங்கு கூடிவிட்டதாகவும், அவைகளின் இறைச்சியை பாதுகாத்து, பதப்படுத்தும் செலவுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் இவைகளை ஈடுகட்ட விலை உயர்வுதான் தவிர்க்கமுடியாத ஒரே வழி என்றும் கூறியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.