ஞாயிறு, 6 ஜூன், 2021

தமிழ்ப் பாடநூல்கள் சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வு

தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால்  5.6.2021அன்று .. சனிக்கிழமை 
தமிழீழத்தில்
இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க் கல்வியின் மேம்பாட்டுக்காக, புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி 
ஆற்றலை இலகுவாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் புதிய தமிழ்ப் பாடநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சுவிட்சர்லாந்திலும் பரவியது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில்
கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,உருமாற்றம் அடைந்து மேலும் தீவிரம் அடைந்துள்ளது.  இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.
அதே போல் தென் ஆப்பிரிக்கா,பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் இருமுறை உருமாறிய பி.1.617- என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சுகாதார அமைப்புகள் 
தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் சுவிட்சர்லாந்து நாட்டில் பரவி உள்ளதாக அந்த நாட்டு பொது சுகாதார ஆணையம் 
தெரிவித்து உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு  இந்தியாவின் உருமாறிய வைரஸ்  இருந்துள்ளது.
அவரது ரத்த மாதிரிகளை கடந்த மாதம் சேகரித்து ஆய்வு செய்ததில் அவருக்கு இந்தியாவின் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் கண்டறியப்பட்ட பயணி, ஐரோப்பிய நாடு வழியாக சுவிட்சர்லாந்துக்கு விமானம் மூலமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அதுபோன்று சுவிட்சர்லாந்தும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சுவிட்சர்லாந்தின் பயண தடை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 5 மார்ச், 2021

சுவிசில் ஓவியத்தினால் ஈழத்தமிழரின் அவலநிலையை உலகறிச் செய்த தமிழ்ச் சிறுமி

மிக அண்மையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமியொருவர் வரைந்த ஓவியம் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர்க் காவியமாய் உள்ள எம் புலத்து இளையோரே! எம் இனத்தின் வலி சொல்ல 
இதுவும் ஒரு வழியே..
ஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் தேசத்திலுள்ள 
வங்கியொன்று தனது
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்திரியாவின் தலைநகரில் நடத்தியது.இதில், சுவிஸ் தேசத்தில் வாழும் சுமார் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.
இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த 
அனுபவத்தை
 ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் விதிமுறையாகும்.இதில், ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த எங்கள் ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஓவியமொன்றை வரைந்தாள்.
ஒரு ஓவியம் தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய் ஓவியமாக்கியவள் எங்கள் தமிழ்மகள் அபிர்சனா தயாளகுரு ஆவார்.சாதாரண வெற்றியுடன் நின்று விடாமல், முதலாம்
 பரிசினைத் தனதாக்கினாள் இவள்.மனதைப்பிழிந்த வலியை ஓவியமாக வரைந்தாள் இவள்.உங்கள் தமிழ் மகளே அபிர்சனா.. உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லை
புலத்தில் வாழும் ஈழத்து இளையோரே..வரலாற்றைப் படிப்பதுடன் நின்று விடாமல், புலம்பெயர் தேசங்களிலும் தமிழனின் அவலங்களை எடுத்துச் சென்று புதிய வரலாற்றைப் படையுங்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>





ஞாயிறு, 17 ஜனவரி, 2021

யாழில் கொரோனா பரபரப்பைக் கிளப்பிய சுவிஸ் போதகர் சற்குணம் மரணம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா.17-01-2021.இன்று  சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன. 
சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த 
சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். 
இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.