சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் பணி நிமித்தமாகவும் புகலிடத்திற்காகவும் வருகை தரும் வெளிநாட்டினர்கள் குறித்து சுவிஸ் குடியமர்வு செயலக அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பணி மற்றும் பிற விடயங்களுக்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ம் ஆண்டில் 9.4 சதவிகிதம் குறைந்து, 71,500 என்ற எண்ணிக்கையில் பின்னடைவை
சந்தித்துள்ளது.
2015ம் ஆண்டில் மட்டும் சுவிஸ் நாட்டிற்கு 1,50,459 நபர்கள் வருகை தந்துள்ளனர். அதேசமயம், 73,444 நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 2015ம் ஆண்டு இறுதி வரை சுவிட்சர்லாந்தில் 19,93,916 வெளிநாட்டு நபர்கள் வசித்துள்ளனர்.
சுவிஸிற்கு வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், சுவிஸில் புகலிடம் கோரி விண்ணப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதாவது, 2015ம் ஆண்டு சுவிஸில் புகலிடம் கோரியவர்கள் 66 சதவிகிதம் அதிகரித்து 39,523 என்ற எண்ணிக்கையை
அடைந்துள்ளது.
இவர்களில் எரித்திரியா நாட்டை சேர்ந்த 9,966 நபர்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 7,831 நபர்களும் சிரியாவை சேர்ந்த 4,745 நபர்களும் இருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக