சுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக்கு இறையாக்கிய நபருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 6 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் சூரிச் நகருக்கு அருகில் உள்ள Dielsdorf பகுதியை சேர்ந்த போலியான சமூக ஆர்வலர் மீதான குற்றம் தான் தற்போது
நிரூபிக்கப்பட்டுள்ளது.
42 வயதான இவர் சுமார் 200 புறாக்களை வளர்த்து வருகிறார். புறாக்களை வானத்தில் பறக்கவிட்டு அவை எவ்வளவு நேரம் தரைக்கு திரும்பாமல் பறந்திருக்கும் என்பதை நிரூபிக்கும் போட்டியிலும் இவர் பங்கேற்று வந்துள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்க இவர் தனது புறாக்களுக்கு நீண்ட நேரம் பறக்கும் பயிற்சியை அளித்து வந்துள்ளார்.
ஆனால், கழுகை போன்ற ராஜாளிப்பறவைகள் புறாவை நடுவானில் கொன்றுவிடுவதால் அந்த ராஜாளிப்பறவைகளை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்தாண்டு புறா ஒன்றின் உடல் மீது கடுமையான விஷத்தை தடவி வானத்தில்
பறக்கவிட்டுள்ளார்.
இவர் எதிர்ப்பார்த்தது போல் ராஜாளிப்பறவை ஒன்று புறாவை வேட்டையாடி தின்றுள்ளது.
துரதிஷ்டவசமாக புறாவின் உடலில் இருந்த விஷத்தால், அந்த ராஜாளி பரிதாபமாக பலியானது. சுவிஸ் நாட்டில் ராஜாளிப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பறவைகளை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெயர் வெளியிடப்படாத அந்த நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில தினங்களில் தீர்ப்பில் அவருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 4,000 பிராங்க் (6,03,447 இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக