வெள்ளி, 20 நவம்பர், 2015

அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிய சிறுமிகளை செல்பியில் புகைப்படம் எடுத்த நபர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 சிறுமிகளை காப்பாற்றாமல் அவர்கள் அருகில் நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Aigle என்ற நகரில் தான் இந்த கொடூர காட்சி அரங்கேறியுள்ளது.
நகரன் மையத்தில் இருந்த சாலை ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை அன்று 10 மற்றும் 11 வயதுடைய சிறுமிகள் 3 பேர் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து சென்றுள்ளனர்.
சாலையின் ஓரத்தில் இருந்த நடைமேடையில் நடந்து சென்ற சிறுமிகளை நோக்கி வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று திடீரென
 மோதியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த 50 வயதான கார் ஓட்டுனர் உடனடியாக காரை விட்டு இறங்கி வந்துள்ளார்.
அப்போது, விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் 
ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பதில், விபத்தில் அடிப்பட்டு கீழே கிடந்த சிறுமிகளை கான கூட்டம் கூடியுள்ளது.
கூடிய கூட்டத்தில் இருந்த மக்கள் சிறுமிகளை காப்பாற்றுவதற்கு பதிலாக, அவர்களை புகைப்படம் எடுக்க தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர், கீழே குணிந்து அடிப்பட்ட சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறிது நேரத்தில் தகவல் அறிந்து பொலிசார் வந்தபோது, எவ்வித காரணமின்றி பொலிசாரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
நிலமையை உணர்ந்து அதிக எண்ணிக்கையில் பொலிசாரை வரவழைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அடிப்பட்ட சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
3 சிறுமிகளில் இருவர் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், Eglantina(11) என்ற சிறுமி கடந்த புதன் கிழமை முழுவதிலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
சாலையில் சிறுமிகள் 3 பேர் அடிப்பட்டுள்ள நிலையில், அவர்களை காப்பாற்றாமல் புகைப்படும் எடுத்துக்கொண்டு சிலரின் நடவடிக்கைகள் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.