சுவிஸில் உள்ள லூசெர்ன் நகரத்தில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள Education First (EF) என்ற நிறுவனம் 2015ம் ஆண்டில் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 70 நாடுகளில் உள்ள சுமார் 9,10,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கடந்த ஆண்டு 18ம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து 19வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் சுவீடனும், 2வது மற்றும் 3வது இடங்களில் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள்
இடம்பெற்றுள்ளன.
ஆங்கில மொழி திறமையை சிறப்பாக வளர்க்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:
1.சுவீடன் 2.நெதர்லாந்து 3.டென்மார்க் 4.நோர்வே 5.பின்லாந்து 6.ஸ்லோவேனியா 7.ஈஸ்டோனியா 8.லக்ஸம்பர்க் 9.போலந்து
10.ஆஸ்திரியா
இதே பட்டியலில் ஆசிய நாடுகளான இந்தியா 20வது இடத்திலும், இலங்கை 49வது இடத்திலும் உள்ளன. ஆய்வில் எடுக்கப்பட்ட 70 நாடுகளில் ஆங்கில மொழி திறனில் மிகவும் பின் தங்கியுள்ள நாடாக லிபியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக