அமெரிக்காவில் பிறந்து கடந்து 18 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்ற டீனா டர்னர்(Tina Turner)(73) என்ற பிரபல பொப் இசைப்பாடகி தற்பொழுது சுவிஸ் கடவுச் சீட்டுப் பெற்றுள்ளார் என்று ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது.
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்காக டீனா ஜேர்மனி மொழியில் கடும் பயிற்சி பெற்ற பின்னர் உள்ளூர் உரிமையியல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனால் கடந்த ஜனவரி மாதம் கூஸ்நாட்( Küsnacht) நகராட்சியில் இருந்து டீனாவுக்கு சுவிஸ் குடியுரிமை கொடுக்கப்பட்டது. இவர் தற்பொழுது சூரிச் ஏரியை நோக்கியபடி காட்சி தருகின்ற ஒரு பெரிய மாளிகையில் தங்கியிருக்கிறார்.
டீனாவின் காதலர் எர்வின் பேக்(Erwin Bach) கடந்த 1995ம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு வேலை மாற்றலாகி வந்தபோது அவரும் கூட வந்துள்ளார். அன்றிலிருந்து இருவரும் இங்கு காதலர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
Trivate Dancer, What's love got to do with it போன்ற பாடல்களை பாடியதன் மூலம் டீனா உலகப் புகழ் பெற்ற பாடகி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக