வியாழன், 11 ஜூலை, 2013

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை வரி அதிகரிப்பு


சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை வரி தொகையானது வருகின்ற நவம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.
மத்திய அரசாங்கமானது நாட்டின் நெடுஞ்சாலை போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நிதி தேவைப்படுவதால் 2015ல் நெடுசாலை வரியினை அதிகரிக்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது.
இதுவரை வாகன ஓட்டிகள் 9.5 பில்லியன் பிராங்க் வரி செலுத்திய போது 70 சதவீத ரசீதினை மற்றும் பெற்றுள்ளனர். மேலும் தற்போது சாலையை கடக்கும் போது அநேக வரியினை செலுத்திவருவதாகவும் தற்போது உயர்த்தப்படும் வரியானது அதிகமான சுமையை தருவதாக உள்ளது என வரி உயர்வை எதிர்த்து பிடரல் அமைப்பானது வாகன ஓட்டியிடம் பெறப்பட்ட 1,05,822 கையெழுத்தினை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் வரி உயர்வானது வெவ்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சங்கமானது தெரிவித்துள்ளது.
ஆனால் அரசாங்க சட்டத்தின் படி சுவிட்சர்லாந்து வழியாக வாகனம் ஒட்டுபவர்கள் 40 பிராங்குகள் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செலுத்தும் 40 பிராங் வரியானது 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும் சுவிஸ் வாகன ஒட்டுநர்கள் கண்டிப்பான முறையில் வரிக்கான ஸ்டிக்கர் தங்கள் வாகனத்தின் முன் ஒட்டியிருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.