சுவிட்ஸர்லாந்து பிரஜைகள் மூவரின் உடலத்தை விமானச் சிதைவுகளுக்குள் இருந்து கடந்த சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளதாக கென்ய வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கென்ய வனத்துறை பேச்சாளரான Paul Mbugua மேலும் தெரிவிக்கையில், சுவிட்ஸர்லாந்து பயணிகள் மூவரும் பயணம் செய்த சிறிய ரக விமானம் கடந்த வியாழக்கிழமை காணாமற்போனதாகவும் இதையடுத்து வனத்துறையினர் உலங்குவானூர்தியை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இத்தேடலை அடுத்து கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள 11,000 அடிகள் உயரமான Aberdares மலையின் உச்சியில் மூவரின் உடலங்களும் விமானச் சிதைவுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக