திங்கள், 8 ஜூலை, 2013

சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன் மரணம்



சுவிஸ் நாட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் அல்பைன்(Alpine) பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான்.
சுவிஸ் நாட்டின் ஜெர்மட் பகுதியில் உள்ள பனியாற்றை கடக்கும் பொழுது இந்த விபத்தானது நடந்துள்ளது.
அல்பைன்(Alpine) பயிற்சியாளர்கள் 2,883 தொலைவில் உள்ள மான்டே ரோசா(Mannte Rosa) பகுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் அங்கிருந்து 8 நபர்கள் ஒரு குழுவாகவும், 5 நபர்கள் ஒரு குழுவாகவும் ஆக மொத்தம் இரண்டு குழுக்களாக பனியாறு கடந்து சென்றுள்ளனர்.
அப்போது காலை 11.15 மணிக்கு பாதையில் ஒரு பாறையின் ஒரு துண்டானது பிரிக்கப்பட்டதில் அக்குழுவில் இருந்த ஒரு சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.
பின்பு அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் உடனடியாக அவசர சேவையை தொடர்பு கொண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
விமானத்தின் மூலம் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 1.45 மணிக்கு உயிரிழந்தான்.
இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.