சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் தான் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் உள்ள பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இன்று காலை 11.20 மணியளவில் ஒரு அவசர தகவல் வந்துள்ளது.
தகவல் பெற்று அதிர்ச்சி அடைந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதே சமயம் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள குடியிருப்பிற்குள் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியாகி கொண்டிருப்பதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தீயை கட்டுபடுத்தியும் உள்ளே நுழைய முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்த குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தியதில், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஒரு தாய், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசித்ததாக தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலில், வீட்டிற்குள்ளே பல உடல்கள் கிடப்பதாகவும், ஆனால், உள்ளே நுழைய முடியாததால் அவற்றை அடையாளம் காண இயலவில்லை என பொலிசாரிடம்
தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த வீட்டில் உள்ள நண்பர்களை பார்க்க வந்ததாக கூறப்படுவதால், அவர்களும் தீவிபத்தில் சிக்கி இருப்பார்களா என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளது.
தற்போது தடவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாவும், இந்த தீவிபத்து பற்றி சில மணி நேரங்களுக்கு பிறகு முழு விபரம் தெரியவரலாம் என பொலிசார்
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக