சுவிசில் காதலன் ஓருவர் தனது காதலியை ஈர்க்கும் பொருட்டு நடத்திய நிகழ்வால் பொதுமக்கள் பாதித்துள்ளதாக கூறி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
Winterthur பகுதியில் உள்ள 26 வயதான அந்த காதலன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சம்மதம் பெற முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கிலோக்கணக்கில் ரோஜா பூக்கள், வாசனை மெழுகுவர்த்திகள், Champagne பானம், கோப்பைகள் என அவரது காதலியை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்தையும் எடுத்து
சென்றுள்ளார்.
காதலியின் வீட்டில் சென்ற இந்த நபர் திருமண சம்மதம் கேட்க அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தம்முடன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களையும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த குப்பைகள் அப்பகுதி மக்களை பாதிப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கு குறித்து விசாரித்த winterthur அமர்வு நீதிமன்றம் சம்பந்தபட்ட நபருக்கு 150 பிராங்குகள் அபராதம்
விதித்துள்ளது.
சம்பவத்தின்போது அப்பகுதியில் கடந்து சென்ற நபர் ஒருவர் பூக்கள் மற்றும் பொருட்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாகவும் அதை அப்படியே விட்டுச்செல்லுமாறு தம்மை கேட்டதாகவும் விளக்கமளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக