சனி, 19 டிசம்பர், 2015

வாலிபர்கள்: மாற்றான் மனைவியை கற்பழிக்க முயன்றனர் பொலிசார் நூதனமாக கைது செய்தனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் மாற்றான் மனைவி ஒருவரை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி என இருவர் வசித்து
 வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் அந்த பெண் தனியாக பெர்ன் நகர ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பெண் தனியாக செல்வதை அறிந்த இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இருவரும் பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியவாறு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் Grosse Schanze என்ற பகுதியை அடைந்ததும் அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வாலிபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
வாலிபர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி வாலிபர்களுக்கு எதிராக போராடியுள்ளார்.
சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் கத்தி கூச்சல் எழுப்ப அவர்கள் இருவரும் அஞ்சியவாரு அங்கிருந்து தப்பி 
ஓடியுள்ளனர்.
நள்ளிரவில் தன்னை கற்பழிக்க முயன்ற சம்பவம் குறித்து அந்த பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் வாலிபர்களின் உடை மற்றும் அங்க அடையாளங்களை சேகரித்துக்கொண்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிசாருக்கு அந்த தகவல்களை 
அளித்துள்ளனர்.
அடையாளங்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், அப்பகுதி முழுவதையும் சல்லடையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் இருவர் தான் பெண்ணை கற்பழிக்க முயன்றது தெரியவர உடனடியாக இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் மற்ற குற்றங்களிலும் தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.