புதன், 2 டிசம்பர், 2015

இருபது கார்களை நொறுக்கிய மர்ம நபர்கள் பொலிசார் தீவிர தேடுதல்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் பார்கிங் செய்திருந்த சுமார் 20 கார்களை உடைத்து சேதாரப்படுத்திய மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Reinach என்ற நகரில் தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெளியே பல கார்கள் பார்கிங் செய்யப்பட்டிருந்துள்ளன.
இந்நிலையில், திட்டம் போட்டு வந்த சில மர்ம நபர்கள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை கண்மூடித்தனமாக உடைத்து சேதாரப்படுத்தியுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள சுமார் 20 கார்களின் மீதும் இந்த தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இன்று காலையில் சேதாரம் அடைந்துள்ள கார்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள் உடனடியாக பேசல் நகர பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து கார்களை ஆய்வு செய்த பொலிசார், Tatnacht Hollenweg, Brunngasse, மற்றும் Lindenweg Rebbergweg உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்று தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தியுள்ளதை 
கண்டுபிடித்துள்ளனர்.
நள்ளிரவில் நிகழ்ந்துள்ள அட்டூழியம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மர்ம நபர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே இரவில் மர்ம நபர்கள் 20 கார்களை அடித்து நொருக்கியுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.