புதன், 4 ஏப்ரல், 2018

சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் சுவிசில் பலி

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த
 ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிச்சறுக்கு விளையாட்டின் போது பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர்களுடன் வந்த இருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் Valais பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இன்னொரு பனிச்சறுக்கு குழுவினர் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பொலிசார் மீட்பு பணியில்
 ஈடுபட்டனர்.
பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஐந்து பேரும் சமிக்ஞை கருவிகளை அணிந்திருந்ததால் மீட்பு குழுவினர் அவர்கள் இருக்கும் இடத்தை சற்று எளிதாக கண்டறிந்து இருவரை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
என்றாலும் போதுமான வெளிச்சம் இல்லாததால் மூன்று பேரின் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்கள் ஸ்பெயின் நாட்டவர்கள் என்பது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார் அவர்களது தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படலாம் என்று Valais பொலிசார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.