வியாழன், 22 மார்ச், 2018

வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து வாலீஸ் (Wallis) மாகாணத்தில் வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வாலீஸ் மாகாண பொஸிஸார் அறிவித்துள்ளனர்.
வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதானது இனிவரும் நாட்களில் கடுமையான குற்றச் செயலாக கருதப்படும் (Criminal), அதேவேளை பொலிஸாரின் வழக்குப் பதிவைப் பொறுத்து தண்டப்பணம் 100 சுவிஸ் பிராங்குகளில் இருந்து அதிகரித்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓட்டுனர் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழப்பதோடு தண்டனையைப் பொறுத்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவரும் எனவும், பொஸிஸார் எச்சரித்துள்ளனர்.
கையடக்கதொலைபேசி பாவனையின் போது விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையும் குறைவதோடு, காப்புறுதி சலுகைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசியை பாவிப்பதன் மூலமே அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்கும் முகமாகவே அதிகபட்ச தண்டனைகளை வழங்க அதிரடி முடிவெடுத்துள்ளதாக பொலீஸார் மேலும்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.