செவ்வாய், 14 ஜனவரி, 2014

உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!

   சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 69 கோல்கள் அடித்து

 சாதனை படைத்தார். மேலும், சுவீடனுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தும் சாதனை படைத்தார். இந்த ஆண்டின் சிறந்த உலக கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்ட ரொனால்டோ, தனது மகன் கிறிஸ்டியானோவுடன் சேர்ந்து மேடைக்கு வந்து விருதை பெற்று கொண்டார்.   

அப்பொழுது மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர் அழுத நிலையில் கண்களை துடைத்து கொண்டு கூறுகையில், இந்த நேரத்தில் எதனை குறித்தும் விவரித்து கூற வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார். இவர் பார்சிலோனோவின் லயனல் மெஸ்சி மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிராங்க் ரைபரி ஆகியோரை

பின்னுக்கு தள்ளி இந்த விருதை அடைந்துள்ளார். மேலும், உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக நாடின் ஆங்கரர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பிபா தலைவர் ஜோசப் பிளாட்டர் மற்றும்
பிரேசில் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் பீலே ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.